பிரபலங்களின் திருமணம்
திருமணம்.
திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.
வாழ்க்கையில் இரண்டு உள்ளங்கள் ஒருவரை ஒருவர் கணவன் மனைவியாக ஏற்றுக் கொள்ளுவது திருமணம்.
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் என இரண்டு உள்ளங்கள் இணைவது திருமணம்.
அந்த இரண்டு இதயங்கள் ஒன்றுக் கொன்று அறிமுகம் இல்லாததாக இருக்கலாம். அல்லது நெருக்கமாகப் பழகியதாக இருக்கலாம். அல்லது பூர்வ ஜென்ம பந்தமாக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் ஒரு ஆண் ஒரு பெண்னை தமது மனைவியாக ஏற்றுக் கொள்வதும் ஒரு பெண் ஒரு ஆணை தமது கணவனாக ஏற்றுக் கொள்வதும் திருமணம் என்னும் வைபவத்தில் தான்.
பெற்றோர் பார்த்து வரன் தேடி திருமணம் செய்தாலும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி தற்போது காதல் திருமணம் என்று சொல்லப்படும் காந்தர்வ மணம் செய்து கொண்டாலும் கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் தமது கடைசி மூச்சு நிற்கும் வரை வாழ்வது திருமணம் என்னும் சடங்கில் தான் ஆரம்பிக்கின்றது.
வசதி வாய்ப்பு குறைவாக உள்ள இடங்களில் சாதாரணமாகப் பந்தல் போட்டு சூரியனின் ஒளிக் கதிர்கள் தென்னங் கீற்றுகளில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக சிறு சிறு வட்டங்களாக மணமக்கள் மீது விழுந்து மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த சிறு சிறு வட்ட வடிவ வெயில் புள்ளிகளில் வந்தமர்ந்து மணமக்களை ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.
அதே போல வசதி படைத்தவர்களாக இருந்தால் ஆடம்பரத்துடன் உள்ள திருமண மண்டபத்தில் மண மேடையில் மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டி வருகை தந்துள்ள பெரியவர்களால் ஆசீர்வாதம் பெறுவதும் திருமணம் தான்.
திருமணம் நடைபெறவிருக்கும் மணமக்கள் இருவரும் மிகவும் பிரபலமானவர்கள். ஆமாம் அவர்கள் இருவரும் நடிப்புத் துறையில் ஈடு பட்டுள்ள பிரபலங்கள்.
உற்றார் உறவினர் சுற்றம் நண்பர்கள் என்பனவற்றையெல்லாம் தாண்டி ரசிகர்கள் கூட்டம் என்று ஒன்று உண்டு. அவர்களால் தான் அந்த திருமண மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் முன்னுக்கு வந்தார்கள் என்று சொல்வது மறுக்க முடியாத உண்மை.
மணமகன் ஒரு முன்னணி திரை நட்சத்திரம். அவர் நடித்த படங்கள் என்றால் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அவருக்கென்று லட்சக் கணக்கான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவருடைய மிடுக்கான தோற்றத்தையும் அழகையும் கண்டு அவர் மேல் ஆசை கொள்ளாத பெண்களே இல்லை. அதே போல ஆயிரக் கணக்கான பெற்றோர் அவரை தமது மருமகனாக அடைய வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.
மணமகள் ஒரு திரை நட்சத்திரம். அவர் நடித்த படங்கள் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்ப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இன்னும் சொல்லப் போனால் பல இளசுகளுக்கு அவர் ஒரு கனவுக் கன்னி. அவருடைய குடும்பப் பாங்கான தோற்றத்தையும் அழகையும் கண்டு அந்தப் பெண் தமக்கு மருமகளாக வரவேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர் ஏராளம்.
கதாநாயகனாக அறிமுகமான முதலாவது திரைப்படத்திலேயே புகழ் பெற்று தொடர்ந்து ஐந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
ஆறாவது படத்தில் நடிக்கும் சமயம் புதுமுகமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தொடாந்து பத்து படங்களில் அவருடன் மட்டுமே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். கதாநாயகன் தொடர்ந்து 15 படங்களையும் கதாநாயகி தொடர்ந்து 10 படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்தமையால் இரண்டு பேரையும் பிரித்து ரசிகர்கள் பார்கக விரும்பாத அளவிற்கு ஜோடிப் பொருத்தம் அமைந்து இருந்தது.
15 படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து விட்டபடியாலும் ரசிகர்pகளின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவும் இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் சேர்ந்து நடிக்கும் 16வது படத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்வது போல திடைப் படத்தில் ஒரு காட்சி.
திரைப்படத் தயாரிப்பாளரும் திரைப்பட இயக்குநரும் திருமணத்திற்கான படப்பிடிப்பு காட்சிகளுக்காக கால்ஷீட் கேட்ட சமயம் திருமணத்திற்கான படப்பிடிப்பினை சாதாரணமாக ஸ்டுடியோவிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ வைக்காமல் ஒரு மிகப் பெரிய மைதானமாக தேர்வு செய்யுமாறும் படப்பிடிப்புக் காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்து முடிக்க வெண்டும் என்றும் அதற்காக எத்தனை கேமராக்களை வேண்டுமானாலும் உபயோகப் படுத்துமாறும் கதாநாயகன் கேட்டுக் கொண்டார்.
திரைப்படத் தயாரிப்பாளரும் திரைப்பட இயக்குநரும் கால்ஷீட் தேதி என்று கேட்ட சமயம் திரைப்படத்திற்கு ஆரம்ப பூஜைகள் நடத்தி வைப்பவரை உடனடியாக வரவழைத்து சுப முகூர்த்த நாளாக பார்க்கும் படி கேட்டுக் கொண்டு அந்த நாளில் திருமண படப்பிடிப்பிற்கான கால்ஷீட் கொடுத்தார் கதாநாயக நடிகர். அந்த சமயத்தில் கதாநாயகி நடிகையும் உடன் இருந்தார்.
திரைப்படத் தயாரிப்பாளருக்கும் திரைப்பட இயக்குநருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. சாதாரணமாக திருமணம் நடைபெறுவது போன்ற காட்சியினைப் படமாக்கும் சமயம் திரைத் துறையில் பணியாற்றி வருபவர்களை வரவழைத்து கல்யாண மண்டபம் நிரம்பியது போல காட்சி அமைப்பார்கள். ஆனால் மிகப் பெரிய மைதானமாக ஏற்பாடு செய்து திருணமணத்திற்கான படப்பிடிப்பினை நடத்துவது என்றால் மைதானம் காலியாக இருக்குமே என்று நினைத்து தமது சந்தேகத்தினை கதாநாயகனிடம் கேட்டனர்.
அதற்கு அவர் ரசிகர்களின் ஆதரவினால் தான் தமது புகழ் பெருகுவதாகவும் ரசிகர்களின் ;ஆதரவில்லாமல் தான் முன்னேறியிருக்க முடியாது என்றும் தெரிவித்து அந்த திருமண காட்சிகள் அனைத்து ரசிகர்கள் முன்னிலையில் தான் நடைபெற வேண்டும் என்றும் அதற்கு உண்டான மைதான வாடகை முதல் வருபவர்களுக்கு விருந்துணவு வழங்குவது உட்பட அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த கதாநாயக நடிகர் பேசும் சமயம் கதாநாயகியுடன் முதல் படத்தில் நடிக்கும் போதே அவரிடம் தமது மனதை உண்மையிலேயே பறிகொடுத்து விட்டதாகவும் தொடாந்து 10 படங்களில் இருவரும் கதா நாயகனாகவும் கதா நாயகியாவும் நடித்த காரணத்தால் கால்ஷீட்டில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருந்த படியால் 15 வெற்றிப் படங்களில் தம்மால் நடிக்க முடிந்தது என்றும் தெரிவித்ததோடு இது உண்மையான திருமணம என்றும் திருமண படப்பிடிப்பு காட்சி அல்ல என்றும் தெரிவித்தார்.
இதனையெல்லாம் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். காரணம் அந்த செலவுகளை கதாநாயக நடிகள் ஏற்றுக் கொள்வது.
அதே சமயம் திரைப்பட இயக்குநர் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அப்போது அந்த கதாநாயக நடிகர் இயக்குநருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
திருமண நாளுக்கு ஐந்து நாடகளுக்கு முன்னர் அனைத்து முன்னணி தினசரி செய்தி பத்திரிகைகளிலும் திருமண அழைப்பிதளை முழுப் பக்க விளம்பரமாகக் கொடுக்க வேண்டும்.
திருமணத்தின் சமயம் திருமணம் நடைபெறும்; மேடையில் நடக்கும் வைபவங்களை ஐந்து கேமராக்களும் திருமணத்திற்கு வந்துள்ளவர்களைப் படம் பிடிக்க ஐந்து கேமராக்களும் திருமணத்திற்கு வருகை தருபவர்களை வரவேற்பதை படம் எடுக்க மூன்று கேமராக்களும் விருந்து உபசாரத்தைப் படம் பிடிக்க இரண்டு கேமராக்களும் பயன் படுத்தப் பட வேண்டும் எனவும் வழக்கம் போல் சொல்லி வரும் வார்த்தைகளான சவுண்ட் ரோலிங் கேமரா ரோலிங் மற்றும் ஆக்ஷன் என்பனவற்றை சொல்லாமல் எந்த கேமராவில் படப்பிடிப்பு தத்ரூபமாக உள்ளதோ அதனை எடிட்டிங் சமயத்தில் பயன்படுத்த வேண்டும்.
திரைப்படத்தில் வரும் திருமணக் காட்சிகளை முதலில் இஸ்லாமிய முறைப்படி கையெழுத்து பெற்றும் கிருஸ்துவ முறைப்படி மோதிரங்கள் மாற்றியும் கடைசியில் ஹிந்து முறைப்படி தாலி கட்டியும் நடைபெற வேண்டும் என்றும் அவைகள் அனைத்தும் முடிந்தவுடன் பதிவாளரை உண்மையிலேயே வரவழைத்து தனி அறையினில் பதிவுத் திருமணமும் நடைபெற வேண்டும்
திரைப் படத்தில் நம் இருவரது உண்மையான திருமண காட்சிகள் குறைந்தது 30 நிமிடங்கள் இடம் பெற வேண்டும்
இவற்றைக் கேட்ட திரைப்பட இயக்குநர் திருமணக் காட்சிகளை 30 நிமிடங்கள் வைப்பதன் நோக்கம் கேட்டதற்கு கதாநாயக நடிகர் தமது ரசிகர்கள் ஒவ்வொருவரும் தமது திருமணத்தில் கலந்து கொண்டதை அவரவர்கள் கண்டு மகிழ வேண்டும் என்பதால் யாரும் வெறுப்படைய மாட்டார்கள் என்று சொல்லி ஆச்சர்யமூட்டினார்.
இரண்டு பிரபலமான திரை நட்சத்திரங்கள் ரசிகர்கள் முன்னிலையில் உண்மையில் திருமணம் செய்து கொண்டதனை படப்பிடிப்பு என நினைத்து கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் திரையில் ஒவ்வொருவரும் தோன்றுவதை காண திரையரங்கத்திற்குச் திரும்பத் திரும்ப சென்றமையால் அந்தப் படம் வழக்கத்திற்கு மாறாக வருடக் கணக்கில் ஓடி அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது.