வெளி நாடுகளில் படப்பிடிப்பு
திருமண படப்பிடிப்பு நடப்பது போன்ற காட்சியில் நடித்து உண்மையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திரத் தம்பதியர் இருவரும் அடுத்த படப்பிடிப்பிற்காக வெளி நாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஒரு புரோகிதரை வரவழைத்து சாந்தி முகூர்த்தத்திற்கான நல்ல நாளினை குறித்துக் கொடுக்கும்படி நடிகர் கேட்டுக் கொள்ள அவ்வாறே நடிகைக்குத் தெரியாமல் தேதியும் குறித்த பின்னர் இருவரும் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதுவரையில் நடந்த படப்பிடிப்புகளின் போது நடிகருக்கு ஒரு தனி அறையும் நடிகைக்கு தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இப்போது திருமணம் ஆகி விட்ட படியால் இருவருக்கும் சேர்த்து ஒரு பெரிய சொகுசான அறை ஏற்பாடு செய்யப்பட்டது.
திரைப்படத்தில் காதலனாகவோ காதலியாகவோ நண்பர்களாகவோ நடிக்கும் சமயம் படப்பிடிப்பு திறந்த வெளியில் பலருக்கு நடுவில் நடைபெறும். அது சமயம் இருவருக்கும் படப்பிடிப்பில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது குறிக்கோளாக இருக்கும். அதே போல இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் சமயம் படுக்க போவது போன்ற காட்சியோ அல்லது படுக்கையிலிருந்து எழுவது போன்ற காட்சியோ அமைக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு கணவன் மனைவியாக ஒரே கட்டிலில் படுக்கப் போவது போன்றோ அல்லது படுக்கையிலிருந்து எழுந்திருப்பது போன்றோ காட்சிகள் அமையும் சமயம் இருவரையும் சுற்றி திரைப்பட இயக்குநர் உதவி இயக்குநர் வசன கர்த்தா நடன இயக்குநர்; ஒளிப்பதிவாளர் மற்றும் வெளிச்சத்தை நன்றாக தெரியச் செய்வதற்கு உண்டான உபகரணங்களுடன் தொழில் நுட்ப கலைஞர்கள் இருப்பார்கள். இதுவும் தவிர கதாசிரியர் இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் நல்லது இந்த வார்த்தைகளை இவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருப்பார். அதே போல ஒப்பனைக் கலைஞர்கள் அவ்வப்போது முகத்தில் பவுடர் பூசி மேக்கப் கலையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
இருவரும் நடிக்கும் சமயம் பலமுறை ஒருசில காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும் காரணம் பாட்டு மற்றும் வசனம் பேசும் போது உதடுகள் சரியாக உச்சரிப்பது போல பொருந்தாமை மற்றும் சரியான நடிப்புத்திறன் வெளிப்படாமை மற்றும் நடனத்தில் சரியான முக பாவங்கள் மற்றும் அங்க அசைகள் வெளிப்படாமை போன்ற மனிதத்தவறுகள் மற்றும் போதுமான ஒளி கிடைக்காமை போன்ற இயற்கைத் தவறுகள். இதுவும் தவிர இந்த இடத்தில் இந்த வசனத்திற்குப் பதிலாக இந்த வசனம் இருந்தால் ரசிகர்கள் மிகவும் ரசித்துப் படம் பார்ப்பார்கள் என்று வசனத்தினை மாற்றி மீண்டும் ஒருமுறை படப்பிடிப்பு நடைபெறும்.
ஒரு திரைப்படத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகின்ற ஒரு பாடலைப் படம்பிடிக்க 6 நாட்கள் வரையிலும் பலப்பல இடங்களில் பலப்பல கோணங்களில் பலப்பல ஆடை அலங்காரங்களுடன் பலப்பல துணை நடனக் கலைஞர்களுடன் பல முறை ஒரே காட்சியினை திரும்பத் திரும்ப படமாக்க வேண்டி இருக்கும். அவ்வாறு பலமுறை படமாக்கப்பட்ட பாடல் காட்சியினை ஒருங்கிணைத்து ஒட்டி அல்லது வெட்டி எது நன்றாக இருக்கின்றதோ அதனை மட்டும் எடிட்டிங் சமயத்தில் எடுத்துக் கொள்வார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய பாடல் காட்சி மட்டும் ரசிகர்கள் மனதில் இடம் பெற்று ரசிகர்களை திரும்பத் திரும்ப திரையரங்கத்திற்கு வரவழைக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் அவ்வாறான பாடல் வரிகள் மட்டும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
பாடல்கள் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறும் சமயம் கதாநாயகன் கதாநாயகி மற்றும் இதர நடனக் கலைஞர்கள் மட்டுமே திரையில் தோன்றுவார்கள். இந்த பாடல் காட்சிகளை படமாக்கும் சமயம் காமிராக்களும் ஒளிப்பதிவாளர்களும் நடன இயக்குநரும் ஒப்பனை கலைஞர்களும் வெளிசத்தை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியோரும் அவ்வப்போது சிற்றுண்டி பரிமாறுபவர்கள் என நூற்றுக் கணக்கானோர் திரண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் யாரையும் ரசிகர்கள் திரையில் கண்டிருக்க மாட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் தனி அறையில் கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ தனிமையில் சோகத்தினால் விசும்பி விசும்பி அழுவது போன்ற காட்சிகளை படம் பிடிக்கும் சமயம் கூட தொழில் நுட்பக் கலைஞர்கள் சுற்றியே இருப்பார்கள்.
இது போன்ற காரணங்களால் புதிதாக திருமணம் செய்து கொண்ட நடசத்திர தம்பதியர் இருவரும் படப்பிடிப்பின் சமயம் தனிமையில் தம் விருப்பப்படி அந்தரங்க விஷயங்களை பேசி மகிழ முடியாது. பொதுவான விஷயங்களை மட்டுமே பேசி சந்தோஷப்பட்டு பிறரையும் சந்தோஷப் படுத்த முடியும்.
வெளி நாடுகளில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து சொண்ட நட்சத்திர தம்பதியர் படப்பிடிப்புக்குப் பின்னர் மிகவும் களைப்புடன் தமது சொகுசு அறைக்குத் திரும்புவார்கள்.
இரவு நேரங்களில் மட்டும் அவர்கள் தனி அறையில் தனிமையில் இருவரும் அமர்ந்து சந்தோஷமாக கடந்த கால நினைவுகளையும் நிகழ் கால நடவடிக்கைகளையும் எதிர் கால கனவுகளையும் பற்றி பேசி மகிழ்வார்கள். நடசத்திரத் தம்பதியரைச் சுற்றி எப்போதும் இருக்கும் கூட்டம் இல்லாமல் இருக்கும் சமயம் தாங்கள் இருவரும் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து பத்து வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கியது வரையில் நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள்.
கதாநாயகிக்கும் சரி கதாநாயகனுக்கும் சரி. திரைப் படத்தில் நடிக்கும் சமயம் இருந்து வந்த நெருக்கம் மற்றும் அந்யோன்யம் கொஞ்சம் கூட இல்லாமல் விலகியே இருப்பார்கள். காரணம் நடிப்பு என்பது இயக்குநர் என்ன சொல்கின்றாரோ அதன்படி செய்வது ஆனால் இது நிஜ வாழ்க்கை. நடிப்பு என்பது வேறு. நிஜ வாழ்க்கை என்பது வேறு. நடிக்கும் சமயம் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்களோ அவ்வளவு நெருக்கமாக நிஜ வாழ்க்கையில் எதிர் பார்க்க முடியாது.
காரணம் தமிழ் நாட்டுப் பெண்களுக்கே உரித்தான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் நட்சத்திர கதாநாயகிக்கு அதிகம். அதனை விட அதிகம் வெட்கப்படுவது. ஆனால் இருவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.
வெளி நாடுகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமயம் தேனிலவு அனுபவிப்பதில் தான் முழுக் கவனமும் இருந்தது. அதாவது உல்லாசமாகப் பேசி சந்தோஷமாக இருப்பது. ஆனால் முதலிரவு மட்டும் நடக்கவில்லை. காரணம் புரோகிதர் குறித்துக் கொடுத்த சாந்தி முகூர்த்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அது வரையில் வெறும் உல்லாசமான பொழுது போக்கு மட்டுமே.
No comments:
Post a Comment