டப்பிங் மற்றும் எடிட்டிங் முடிந்த பின்னர் தேனிலவு
லட்சக் கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பினை கண்டு ரசித்த அதே வேளையில் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் வெளி நாடுகளில் மட்டுமே கலந்து கொள்வது என்று தீர்மானித்தனர்.
அவர்கள் தீர்மானித்தபடி தொடர்ந்து மூன்று திரைப் படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்க கால்ஷீட் கொடுத்தனர். ஆனாலும் படப்பிடிப்பு உடனே துவங்கவில்லை.
காரணம் தாம் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படத்தில் குரல் கொடுப்பதற்கும் திரைப்படத்தினை எடிட் செய்வதற்கும் தணிக்கைச் சான்று வரப்பெற்றவுடன் திரை அரங்குகளில் வெளியான பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பினையும் ரசனையினையும் கண்டு களிக்க விரும்பியதும் தான். இதற்கு சுமார் ஒரு மாத காலம் பிடித்தது.
இதற்கிடையில் தயாரிப்பாளரும் திரைப்பட இயக்குநரும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு முதலிரவு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி சாந்தி முகூர்த்தத்துக்கு தேதி குறிப்பதற்கு அனுமதி கேட்டனர். அதற்கு இருவரும் சாந்தி முகூர்த்தத்தை வெளி நாடுகளில் படப்பிடிப்புக்குச் செல்லும் சமயம் வைத்துக் கொள்வது என்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம் புது மணத் தம்பதிகள் தேனிலவினை அனுபவிக்கச் செல்லும் வெளி நாடுகளைத் தேர்வு செய்து அந்த நாடுகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக அனுபவிக்கப் போவதாக தெரிவித்தனர்.
புதிதாக திருமணம் செய்து கொண்ட திரைப்பட நட்சத்திர தம்பதிகள் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க மூன்று தயாரிப்பாளர்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு மூன்று இயக்குநர்கள் மற்றும் துணை நடிக நடிகையர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் சேர்ந்து பலப்பல வெளி நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பினை மேற்கொண்டனர்.
புது மணத் தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக பகல் நேரத்தில் ஒருவரை ஒருவர் இணை பிரியாமல் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தனர் அதை விட சந்தோஷமாக இரவு நேரத்தில் தேனிலவு உண்மையில் அனுபவித்தனர்.
ஓய்வு கிடைக்கும் சமயம் தாம் இருவரும் சேர்ந்து நடித்து வெளி வந்துள்ள திரைப் படங்கள் வெளி நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்ட சமயம் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து தாம் நடித்து வெளி வந்த திரைப் படங்களை தாமே கண்டு களித்து மகிழ்ந்தனர்.
ஒரு சில இடங்களில் திரையரங்க உரிமையாளர்கள் இவர்களின் வருகை பற்றி ஒலி பெருக்கியில் தெரிவித்து திரையரங்கில் திரைக்கு முன்னர் நேரடியாக தோன்றச் செய்து சந்தோஷப் படுத்தினர்.
இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்வது போல் காட்சி அமைக்கப் பட்ட திரைப்படத்தினைக் காண வெளி நாடுகளில் உள்ள திரை அரங்குகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. சில இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதற்கு காரணம் கேட்ட போது திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம் படப்பிடிப்பினை நேரில் கண்டு களிக்க தமது உறவினர்கள் தமது அண்டை வீட்டார்கள் தமது நண்பர்கள் மற்றும் தமது நெருக்கமானவர்கள் என யாரேனும் ஒருவர் திருமணத்தின் போது கலந்து கொண்டதை கட்டாயம் திரையில் காண வேண்டும் என்பதற்காகவே தாம் திரைப்படத்தினை திரும்பத் திரும்ப வந்து பார்த்து ரசித்துச் செல்வதாக பலர் தெரிவித்தனர்.
இதனை அறிந்த நட்சத்திரத் தம்பதியர் திரை அரங்குகளில் ரசிகர்கள் முன் நேரில் தோன்றி தாங்கள் இருவரும் உண்மையிலேயே செய்து கொண்ட திருமணத்தினை காணவே அனைவரும் வருகை தந்திருந்தார்கள் எனவும் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு மதத்தினரும் மன வருத்தம் அடையக் கூடாது என்னும் பரந்த மனப்பான்மையுடன் முஸ்லீம் முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டும் கிருஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டும் ஹிந்து முறைப்படி தாலி கட்டியும் திருமணக் காட்சி அமைக்கப் பட்டிருந்ததாகவும் அதே சமயம் இந்தியாவில் அமுலில் உள்ள திருமண பதிவுச் சட்டத்தின்படி தனி அறையில் தமது திருமணத்தினை பதிவுத் திருமணமாக பதிவு செய்துள்ளதாகவும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இவற்றையெல்லாம் கேட்டு இரசிகர்களின் கை தட்டல் மற்றும் ஆரவாரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அடுத்தடுத்து சென்ற பிற ஊர்களிலும் பிற வெளி நாடுகளிலும் இதே போன்ற கரகோஷம் மற்றும் சந்தோஷப் பெருக்கு.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் புதுமணத் தம்பதியருக்கு தமது வீட்டிற்கு நேரில் வரவழைத்து விருந்து படைத்தனர். திருமணத்தின் சமயம் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்ல. இவர்களது அழகு மற்றும் நடிப்பாற்றல் கண்டு வெளி நாட்டவர் கூட நட்சத்திர ஹோட்டல்களில் மாலை நேரங்களில் ஒன்று கூடி மாலை நேர சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருவரையும் சிறப்பு விருந்தினராக வரவழைத்து கௌரவித்து ஏராளமான திருமணப் பரிசுப் பொருட்களையும் கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போயினர்.
இவ்வாறு வரப்பெற்ற பரிசுப் பொருட்களின் மதிப்பு நட்சத்திரத் தம்பதியருக்கு அந்த திரைப் படத்தில் நடித்தமைக்கு வழங்கப் பட்ட சம்பளத் தொகையை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.
திரைப்படத்தில் நடிக்கவும் தேனிலவு அனுபவிக்கவும் சென்ற தம்பதியினர் தனிமையில் என்ன பேசிக் கொண்டார்கள்?
நான் கேட்டு சொல்கின்றேன்.
No comments:
Post a Comment