கணவர் அறிமுகம்.
நட்சத்திரத் தம்பதியர் இருவரும் வெளி நாடுகளில் தங்கி இருந்த சமயம் முதல் முறையாக தனிமையில் தனி அறையில் தங்கினர். தமிழ் நாட்டுப் பெண்களுக்கே உரித்தான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கு வகை குணங்களுடன் கணவன் அருகே வந்தமர்ந்தாள். அப்போது கணவர் பக்கம் தலை நிமிர்ந்து பார்க்காமல் தரையினையும் சுற்றியிருந்த பொருட்களையும் பார்த்தவண்ணம் இருந்தாள்.
அன்றைய தினம் காலையில் இருவரும் முதலிரவு நடப்பது போன்ற காட்சியில் நடித்து முடித்திருந்தனர். தனக்கும் அதே போன்ற முதலிரவு நடக்கலாம் என்னும் எண்ணம் மனைவியிடத்தில் இருந்தது. அதனை அறிந்து கொண்ட கணவன் மனைவியைப் பார்த்து ஏன் இந்த தயக்கம் அருகில் அமரலாமே எனக் கேட்டதற்கு அவள் வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
அதனைக் கண்ட கணவன் மனைவியிடம் நம் இருவருக்கும் முதலிரவு என்று நினைக்க வேண்டாம். அதற்கு நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் ஆகியவற்றை புரோகிதரிடம் குறித்து வந்துள்ளேன். அந்த நாளில் தான் முதலிரவு. அதுவரையில் நாம் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் சந்தோஷமாக அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தவுடன் மனைவி சற்று நெருக்கத்தில் அமர்ந்தாள்.
அதன் பின்னர் மனைவி கணவரிடத்தில் என்னைப் பற்றி நான் முதலில் சொல்லி விடுகின்றேன் எனக்கூற கணவன் முதலில் நீ என்னைப் பற்றி அறிந்து கொள். அதன் பின்னர் உன்னைப் பற்றி நான் அறிந்து கொள்கின்றேன் என கூறினார்.
மனைவியும் சரியெனச் சொன்ன பின்னர் கணவன் தனது வாழ்கையினைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
நான் திரைப்படத்துறையில் நடிப்பதற்கு முயற்சிக்கவில்லை. திரைப் படத்தில் திரைப்படப் பாடல்களை பாடுவதற்குத் தான் முயற்சி செய்தேன். ஆனால் நான் நடிகனாக வந்து விட்டேன்.
நடிகனாக வர வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் நான் பாடகனாக வர வேண்டும் என்று முயற்சித்ததற்கு ஒரே காரணம் ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாவதற்கு முன்னர் திரைப்படத்தின் பெயரினையும் பாடியவர்கள் பெயரினையும் தான் சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சியில் தோன்றி நடித்த நடிகர்களின் பெயரினைச் சொல்ல மாட்டார்கள்.
எனவே நான் என் பெயர் எப்போதும் எல்லோராலும் சொல்லப் பட்டு நினைவு கூறப்பட்டு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக திரை படப் பாடல்களைப் பாடும் பாடகனாகவே வரவேண்டும் என்று எண்ணினேன்.
நடிகனாக வர வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் நான் பாடகனாக வர வேண்டும் என்று முயற்சித்ததற்கு ஒரே காரணம் ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாவதற்கு முன்னர் திரைப்படத்தின் பெயரினையும் பாடியவர்கள் பெயரினையும் தான் சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சியில் தோன்றி நடித்த நடிகர்களின் பெயரினைச் சொல்ல மாட்டார்கள்.
எனவே நான் என் பெயர் எப்போதும் எல்லோராலும் சொல்லப் பட்டு நினைவு கூறப்பட்டு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக திரை படப் பாடல்களைப் பாடும் பாடகனாகவே வரவேண்டும் என்று எண்ணினேன்.
நான் நன்றாகப் பாடுவேன். காரணம் என்னுடைய தந்தை நன்றாகப் பாடுவார். அவர் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு ராகம் தாளம் பல்லவி சுதி என்பது எதுவும் தெரியாது. அவர் மேடைகளில் கச்சேரி எதுவும் செய்ய மாட்டார். அவர் ஒரு வியாபாரி.
பாட்டுப் பாடித்தான் வியாபாரம் செய்ய முடியும். அது என்ன வியாபாரம் என்று சொல்கின்றேன். சிறு குழந்தைகள் சவ்வு மிட்டாய் வாங்கி பிரியமுடன் சாப்பிடுவார்கள். சவ்வு மிட்டாய் ஒரு மூங்கிலின் உச்சியில் உள்ள பொம்மைக்குக் கீழே இருக்கும். என் தந்தை தமது கால் கட்டை விரலைக் கொண்டு அந்த பொம்மையை ஆட வைத்து அதற்கேற்றவாறு பாடல் பாடி விற்பனை செய்வார்.
என் தந்தையின் பாட்டினைக் கேட்கவும் அந்தப் பாட்டிற்கு ஏற்றபடி பொம்மை ஆடுவதைப் பார்க்கவும் பொம்மையிடம் கை தட்டச் சொன்னால் உடனே பொம்மை தட்டுவதையும் பார்க்க வருகின்ற குழந்தைகள் தமக்கு வேண்டிய மிட்டாயினை வாட்ச் வடிவத்திலும் நெக்லஸ் வடிவத்திலும் வாங்கி மகிழ்வார்கள்.
அவர்களுக்கு மோதிர வடிவிலான மிட்டாய் ஒன்றினை இலவசமாக கொடுத்து சந்தோஷப் படுத்துவார். குழந்தைகள் மோதிர வடிவிலான மிட்டாயினை மட்டும் சாப்பிட்டு விட்டு வாட்சினையும் நெக்லசையும் நீண்ட நேரம் அணிந்திருப்பார்கள்.
அவர்களுக்கு மோதிர வடிவிலான மிட்டாய் ஒன்றினை இலவசமாக கொடுத்து சந்தோஷப் படுத்துவார். குழந்தைகள் மோதிர வடிவிலான மிட்டாயினை மட்டும் சாப்பிட்டு விட்டு வாட்சினையும் நெக்லசையும் நீண்ட நேரம் அணிந்திருப்பார்கள்.
நான் இந்த உலகிற்கு வரும் சமயம் மருத்துவ மனையில் இரண்டு உயிர்களில் ஒன்றைத் தான் காப்பாற்ற முடியும் என்று சொன்ன வேளையில் என் தந்தையால் வருத்தத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
ஆனால் துரதிருஷ்ட வசமாக நான் இந்த பூவுலகிற்கு வந்த சில நிமிடங்களில் என் தாய் இறைவனிடம் சேர்ந்து விட்டாள். தாய்க்குத் தலைமகனாக நான் பிறந்தும் கூட நான் என்னுடைய தாய்க்கு உண்டான இறுதி சடங்குகளைச் செய்ய என்னால் முடியவில்லை. காரணம் என் தாயாரை அடக்கம் செய்யும் சமயம் என்னுடைய வயது ஒரு நாள். ஒரே ஒரு நாள்.
ஏழ்மை நிலையிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த என்னுடைய தந்தை மீண்டும் மறுமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. காரணம் தாம் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டு இரண்டாவதாக வரப் போகின்ற மனைவியும் குழந்தை பெற்றவுடன் இறந்து விட்டால் மீண்டும் ஒரு சோகத்தைக் தாங்க முடியாது என்னும் எண்ணம்.
தாய் இல்லாத குறை தெரியாமல் என்னை என்னுடைய தந்தை அன்புடன் வளர்த்தார். நான் கைக்குழந்தையாக இருக்கும் சமயம் என்னுடைய உறவினர் ஒருவர் என்னை வளர்த்து வந்தார். நான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் நானும் என் தந்தையும் மாத்திரம் தனிமையில் வசித்து வந்தோம்.
என்னுடைய தந்தை ஏழையாக இருந்தாலும் தன்மானத்துடன் வாழந்தார். யாரிடத்திலும் யாசகம் கேட்க மாட்டார். கடன் வாங்கவும் மாட்டார். நான் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்துப் பாடு பட்டார்.
பணப் பற்றாக்குறை காலங்களில் நிலைமையினை சமாளிக்க மாலை நேரத்தில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்வார். அதே போல திருவிழாக் காலங்களில் குழந்தைகளுக்கான மொம்மைகள் பலூன் ஆகியவற்றை விற்று என்னைப் படிக்க வைத்தார்.
அவரிடம் வாடிக்கையாளர்களாக உள்ள குழந்தைகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றார்களோ அதை விட அதிக சந்தோஷமாக என்னை வைத்திருக்க வேண்டும் என்று பாடு படுவார்.
அவரிடம் வாடிக்கையாளர்களாக உள்ள குழந்தைகள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றார்களோ அதை விட அதிக சந்தோஷமாக என்னை வைத்திருக்க வேண்டும் என்று பாடு படுவார்.
நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் என்னைக் கல்லூரியில் சேர்த்தார். என்னுடைய துரதிருஷ்டம் என் தந்தை நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் சமயம் நோய் வாய்ப்பட்டு அகால மரணமடைந்தார். படிப்பதற்கு பணம் இல்லாததாலும் என் தந்தையுடன் வாழ்ந்த வீட்டில் அவருடைய நினைவுகளுடன் தனியாக இருக்க முடியாத காரணத்தாலும் நான் அந்த வீட்டிலிருந்து இங்கு வந்து விட்டேன். அந்த வீடு என்னுடைய கட்டுப்பாட்டில் இன்றும் கூட இருந்து வருகின்றது.
திரைப் படப் பாடகனாக வரவேண்டும் என நான் பல திரைப்பட இசை அமைப்பாளர்களை அணுகிய போது சங்கீதம் கற்று இருக்க வேண்டும். இராகம் தாளம் பல்லவி தெரிந்திருக்க வேண்டும் கர்நாடக சங்கீதம் தெரிந்திருக்க வேண்டும் இசை ஞானம் இல்லாதவன் என்று என்னை விரட்டினார்கள். அந்த கால கட்டத்தில் நான் மிகவும் கஷ்டப் பட்டேன்.
அந்த வேளையில் ஒரு இசை அமைப்பாளர் வீட்டிற்கு ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் வந்திருந்தார்கள். அப்போது நான் திரைப்படப் பாடல் பட வாய்ப்பு கேட்டு சென்று இருந்தேன். என்னைக் கண்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் எனக்கு திரைப் படத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்கள். ஆரம்பத்தில் நான் மறுத்தேன். பின்னர் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன்.
அதன் படி எனக்கு முதலாவது படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. திரைப் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்த காரணத்தால் அந்த திரைப் படத்தின் இசை அமைப்பாளர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரது வற்புறுத்தலின் காரணமாக என்னையே திரைப்படப் பாடல்களைப் பாட வைத்தார். இதனை விட வேடிக்கை எந்த இசை அமைப்பாளர் எனக்கு இசை ஞானம் இல்லை என்று விரட்டினாரோ அதே இசை அமைப்பாளர் தான் அந்த படத்திற்கும் இசை அமைத்தார்.
என்னுடைய தந்தை குழந்தைகளக் கவர சவ்வு மிட்டாய் விற்கும் சமயம் எந்தப் பாட்டினைப் பாடி என்னை வளர்த்தாரோ அந்த பாடலை அவருடைய ராகத்தில் பாடினேன். என்னுடைய தந்தையின் பாடலை நான் அப்படியே பாடியதால் எனக்கு திரைப்பட பாடலாசிரியர் பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் என்னும் அங்கீகராமும் கிடைத்தது.
அந்த படத்தில் வாத்தியக் கருவிகளின் ஓசையினை இசை அமைப்பாளர் ஒருங்கிணைத்த போதிலும் நானே பாடல் எழுதி இசை அமைத்து பாடியதாக ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம். நான் என்னை வளர்த்த தந்தைக்கு செய்த மரியாதையாக கருதினேன். அந்த பாடல் தான் அந்த படத்தில் டைடில் பாட்டாக வந்தது.
அந்த படத்தில் வாத்தியக் கருவிகளின் ஓசையினை இசை அமைப்பாளர் ஒருங்கிணைத்த போதிலும் நானே பாடல் எழுதி இசை அமைத்து பாடியதாக ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம். நான் என்னை வளர்த்த தந்தைக்கு செய்த மரியாதையாக கருதினேன். அந்த பாடல் தான் அந்த படத்தில் டைடில் பாட்டாக வந்தது.
அதன் மூலம் என்னுடைய திரைப்படப் பாடகனாக வரவேண்டும் என்னும் ஆசை நிறைவேறி விட்டது. நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் திரைக்கு வருமுன்னரே நான் பாடிய பாட்டுக்கள் வானொலிகளில் என்னுடைய பெயருடன் ஒலிபரப்பப் பட்டது கேட்டு மிகவும் மகிழ்ந்து போனேன்.
என்னுடைய திரைப்படப் பாடல் அனைவரையும் கவர்ந்து விட்ட காரணத்தால் திரைப்படம் வெளியிடும் நாளன்று பாடலை ரசித்துக் கேட்டவர்கள் நான் நடித்து வெளிவந்த திரைப்படத்தினைக் காணும் ஆவலுடன் திரையரங்கத்திற்கு வர ஆரம்பித்தனர்.
என் தந்தை சவ்வு மிட்டாய் விற்பதற்குப் பாடிய பாட்டு இப்போது உலகம் முழுவதும் பட்டி தொட்டி களில் கூட என்னுடைய குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நான் பாடிய பாடல்களால் என் முதலாவது திரைப் படம் எனக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
என் தந்தை சவ்வு மிட்டாய் விற்பதற்குப் பாடிய பாட்டு இப்போது உலகம் முழுவதும் பட்டி தொட்டி களில் கூட என்னுடைய குரலில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நான் பாடிய பாடல்களால் என் முதலாவது திரைப் படம் எனக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
அதன் பின்னர் தொடர்ந்து நான்கு வெற்றிப்படங்கள். ரசிகர்கள் என்னை திரைப்பட பாடலாசிரியராகவும் பாடகனாகவும் திரைப்பட நாயகனாகவும் ஏற்றுக் கொண்டார்கள். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எனக்கென்று ரசிகர் மன்றங்கள் உருவாகின.
என்னுடைய ரசிகர்கள் அனைவரும் என்னுடைய பிறந்த நாளை மிகவும் ஆரவாரமாகக் கொண்டாட நினைத்தார்கள். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. காரணம் நான் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய அதே நாளில் என்னுடைய தாயாருக்கு திதி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஐந்து படங்கள் நடித்து வெற்றிக் கதாநாயகன் என்னும் நிலையில் என்னுடன் உன்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்கள். முதல் ஐந்து படங்களில் நடிக்கும் சமயம் கதாநாயகிகளின் உறவினர்கள் கூட வந்து இருப்பார்கள். ஒரே நேரத்தில் வேறு வேறு படங்களில் நடிக்க கதாநாயகிகள் கால்ஷீட் கொடுத்து இருப்பார்கள். அவ்வாறான நேரங்களில் நான் நடிக்க முடியாமல் சும்மா இருக்க வேண்டியிருக்கும்.
நீயும் நானும் சேர்ந்து நடித்த முதல் படத்தில் உன்னை அழைத்து வரவோ திரும்ப அழைத்துச் செல்லவோ யாரும் கூட வரவில்லை. வேறு படங்கள் எதிலும் நடிக்க நீ ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. எனவே மிகக் குறுகிய காலத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் வெளி வந்தது.
இந்நிலையில் உன்னைப் பற்றி நான் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் விசாரித்த சமயம் மகளிர் விடுதியில் தங்கி இருப்பதாகவும் விடுதியிலிருந்து நடிக்க ஸ்டுடியோவிற்கு வந்து நடித்து முடித்த பின்னர் மீண்டும் விடுதிக்கே திரும்பி விடுவதாகவும் அறிந்தேன். எனவே என்னுடைய மேலாளரையே உன்னுடைய கால்ஷீட் மற்றும் இதர பணிகளை கவனிக்க உனக்குத் தெரியாமல் நியமனம் செய்தேன். நீயும் நானும் சேர்ந்து நடித்து வெளிவந்த திரைப்படம் அமோக வெற்றியைத் தந்தது.
எனவே அடுத்தடுத்த படங்களில் நீயும் நானும் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் கேட்டுக் கொண்டேன். இரண்டு பேர்களின் கால்ஷீட்களையும் என்னுடைய மேலாளரே கவனித்துக் கொண்டார். அதனால் தான் தொடர்ந்து நீயும் நானும் பத்து படங்களில் நடிக்க முடிந்தது.
இடையில் நானாக முன் வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்ததற்கு நீ பதில் எதுவும் சொல்லாமல் இருந்த காரணத்தால் மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று பிறர் சொல்ல நான் அறிந்து கொணடேன்
நாம் இருவரும் சோந்து 10-வது படத்தில் நடிக்கும் ச்மயம் எனது திருமண ஆசையை உன்னிடத்தில் தெரிவித்தேன். நீயும் சரி என்று ஒப்புக் கொண்ட படியால் நமது திருமணம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடம்பரமாக நடக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு அவ்வாறே நடந்து முடிந்தது. அதற்கு உண்டான செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொண்டேன்.
எனக்குப் பெற்றோர் இல்லை. உனக்கும் பெற்றோர் இல்லை என்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும். எனவே நிறையப் பேர் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நிறைய ஆசீர்வாதத்துடன் உன்னை நான் மணந்து கொண்டேன். அந்தப் படம் வெளி நாடுகளில் கூட வெற்றிப்படமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது.
திரைப்படத்தில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்ட காட்சி படமாக்கப் பட்ட நாளன்று அந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய முன்வந்தனர். நான் அதனை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் வெளிநாடுகளில் தேனிலவு மற்றும் படப்பிடிப்பு என்றும் இரண்டிற்குமாக நாம் இருவரும் செல்ல இருப்பதாகத் தெரிவித்தேன். அவர்களும் கட்டாயப் படுத்தாமல் சரியென ஒப்புக் கொண்டனர்..
இது வரையில் தனித்தனி அறைகளில் உறங்கிய நாம் இருவரும் இனிமேல் ஒரே அறையில் ஒரே கட்டிலில் உறங்கலாம். சாந்தி முகூர்த்தம் பற்றி பின்னர் முடிவெடுக்கலாம் எனக் கூறி எல்லா விதமான கவலையும் மறந்து நாம் இருவரும் உறங்கலாம் எனக் கூறி இருவரும் உறஙகலாயினர்..