தந்தையின் வீட்டில் முதலிரவு
தேனிலவு மற்றும் படப்பிடிப்பு என இரட்டை பணிகளுடன் வெளி நாடுகளுக்குச் சென்ற நட்சத்திரத் தம்பதியர் இருவரும் மீண்டும் இந்தியா திரும்பி வெளி நாடுகளில் படமாக்கப் பட்ட திரைப்படங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சகஜ நிலைக்குத் திரும்பினர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர் நடைபெற வேண்டிய முதலிரவு மட்டும் இன்னும் நடைபெறாமல் உள்ளது.
எனவே மீண்டும் ஒரு முறை புரோகிதரை வரவழைத்து சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ள ஏற்கனவே குறித்துக் கொடுத்த நாட்களில் நடைபெறவில்லையா என புரோகிதர் கேட்க இடைப்பட்ட காலத்தில் நடை பெற்ற சம்பவங்கள் அனைத்தும் அவரிடத்தில் தெரிவிக்கப் பட்டது.
அதனை அறிந்த புரோகிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து மீண்டும் சில குறிப்பிட்ட நாட்களை கணித்துக் கொடுத்தார். அப்போது புரோகிதரிடத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கின்ற தன்னுடைய தந்தை வாழ்ந்த வீட்டில் தான் சாந்தி முகூர்த்தம் நடைபெற இருப்பதாகவும் அதற்காக ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா எனக் கேட்க அந்த வீட்டில் ஏதேனும் கட்டுமான மாறுதல்கள் செய்யப் போகின்றீர்களா என புரோகிதர் கேட்டார்.
அப்போது கணவன் மனைவியைப் பார்த்த சமயம் சாந்தி முகூர்த்தம் நடைபெறவிருக்கும் இடம் தமது மாமனார் மற்றும் மாமியார் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த புனிதமான இடம்.
தமது கணவரை அவரது தந்தை சுயமாக உழைத்து சம்பாதித்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருப்பதால் குடிசை வீடாக இருந்தாலும் சரி அல்லது பங்களாவாக இருந்தாலும் சரி வீட்டினில் எந்த வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே ஒட்டடைகளை மாத்திரம் நீக்கி விட்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் அல்லது பெயிண்ட் பூசுதல் மற்றும் சிறிய சிறிய மராமத்துக்கள் ஆகியன மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தமது கணவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது அவரது தந்தை மற்றும் அவரது வணிகம். எனவே தன்னுடைய மாமனார் வணிகம் செய்யும் சமயம் அவரது கரங்களில் நிழல் போலவே கூட இருந்து வந்த அந்த கை தட்டும் பொம்மையுடன் கூடிய மூங்கில் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதே போல தம்முடைய சொகுசான தற்காலிக தங்கலுக்காக எந்த விதமான புதிய பொருட்கள் அதாவது கட்டில் மேஜை சோபா போன்றவை எதுவும் வாங்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட புரோகிதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் சாந்தி முகூர்த்தத்துக்கு உண்டான நல்ல நாட்கள் சிலவற்றினை குறித்துக் கொடுத்து சாந்தி முகூர்த்தம் நடைபெற இருக்கும் வீடு பல நாட்களாக பூட்டிக் கிடப்பதால் அந்த வீட்டில் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னர் ஒரு முறை கணபதி ஹோமம் மட்டும் செய்தால் போதும் எனக் கூறி அந்த பொறுப்பினை அவரே ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அந்த வீட்டினை சுத்தம் செய்யவும் சிறிய அளவிலான மராமத்து பணிகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளவும் பெயிண்ட் பூசுவதற்கும் பணியாட்களை அனுப்புவதென்றும் அந்த பணியினை தமது மேலாளர் பார்த்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப் பட்டன. அதன்படி தம்பதியர்களின் மேலாளர் மற்றும் இதர பணியாளர்கள் அந்த இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மேலாளர் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் நட்சத்திர நடிகரின் வீட்டிற்குச் சென்று செப்பனிடும் பணிகளைத் துவக்கிய சமயம் மிட்டாய் தாத்தாவின் வீடு நீண்ட நாட்களுக்குப் பின்னர் புனரமைக்கப் படுகின்றது. எனவே ஏதேனும் விசேஷம் கட்டாயம் இருக்கும் என்னும் அனுமானத்தில் அக்கம் பக்கத்தினர் கேட்க ஆரம்பித்தனர்.
அப்போது அந்த மேலாளர் தாங்கள் அனைவரும் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்த மிட்டாய் தாத்தாவின் மகன் மற்றும் மருமகளுக்கு அதாவது நட்சத்திரத் தம்பதியினருக்கு இந்த வீட்டில் தான் முதலிரவு நடைபெற இருப்பதாகவும் அதற்காக வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவரம் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் இருக்கும் நட்சத்திர நடிகரின் ரசிகர்கள் நடிகர் எப்போது வருகின்றார் எத்தனை நாட்கள் தங்கப் போகின்றார் என்ற கேள்விகள் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அந்த மேலாளர் இன்னும் தேதி முடிவாகவில்லை. ஆனால் மிக விரைவில் என்று மாத்திரம் சொல்லி முடித்தார்.
அதன் பின்னர் அனைத்து மராமத்துப் பணிகளும் முடிவடைந்தது என்னும் விவரம் நட்சத்திரத் தம்பதியினரிடம் தெரிவிக்கப் பட்டது.
நட்சத்திரத் தம்பதியினர் மீண்டும் ஒரு முறை புரோகிதரை வரவழைத்து கணபதி ஹோமத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசனை மற்றும் எந்த நாளில் சென்னையிலிருந்து புறப்படுவது எப்போது கணபதி ஹோமம் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டது.
அதற்குப் பின்னர் கதாநாயகியின் வேண்டுகோளின் படி திரைப்படத் துறையினருக்கு உணவு சமைத்துப் பரிமாறும் தம்பதியர் மணமகள் வீட்டின் சார்பாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற சமயம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து முடித்த அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் இதர துணை நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மணமகன் வீட்டின் சார்பாகவும் அந்த இடத்திற்குச் செல்வது என்றும் முடிவெடுக்கப் பட்டது.
நிறைய பேர் அங்கு வந்து தஙகுவதற்கு வசதியாக இரண்டு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு வருகை தருகின்ற அனைவருக்கும் விருந்து படைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நட்சத்திர தம்பதியினர் நமது சொந்த இல்லத்திற்கு வருகை தருவதை கொண்டாடும் வகையில் அவர்களின் ரசிகர்கள் ஊர் முழுக்க அவர்கள் நடித்து வெளி வந்த திரைப் படங்களின் போஸ்டர்களையும் வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும் அவர்கள் வருகின்ற வழியெங்கும் கட்டி மிகுந்த ஆரவாரங்களுடன் வரவேற்க ஆயத்தமாயினர்.
நட்சத்திரத் தம்பதியினர் சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகரின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். வருகின்ற வழியெங்கும் அவர்களை வரவேற்க கட்டப் பட்டிருக்கும் தோரணங்கள் மற்றும் வரவேற்பு வாசகங்களை கண்டு மகிழ்ந்தனர். அதே போல ரசிகர்கள் பலரும் சாலையின் இருபக்கமும் நின்று வரவேற்பு கொடுத்தனர்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் நடிகரின் வீட்டில் குறிப்பிட்ட நபர்களுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. கணபதி ஹோமத்திற்குப் பின்னர் தம்பதியினர் இருவரும் விருந்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
உள்ளுர் மக்கள் உள்ளுர் நண்பர்கள் உள்ளுர் ரசிகர்கள் மற்றும் சுற்றுப்புர வட்டாரங்களிலிருந்து ரசிகர்கள் எனஅனைவரும் வந்திருந்து நட்சத்திரத் தம்பதியினரிடம் நேரில் பேசி மகிழ்ந்தனர்.
திரைப் பட நடிகையின் உறவினர்களான அத்தை மற்றும் மாமன் வீட்டாரும் முறை மாப்பிள்ளைகளும் கூட வந்திருந்தனர். திரைப்பட நடிகை பல படங்களில் நடித்து முடித்த காரணத்தால் மிகுந்த மனப் பக்குவம் பெற்றிருந்தாள்.
நெல் பயிர் நாற்று நடும் போது நேராக நிமிர்ந்தும் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் சமயம் தலை குனிந்தும் காணப்படுவது போல பெற்றோர் உயிருடன் இருந்த சமயம் நாடோடிகள் என்று உதாசீனப் படுத்தியவர்களைக் கூட மிக்க பணிவுடன் வரவேற்று உபசரித்தாள். இது அவளிடத்தில் ஏற்பட்டிருந்த தன்னடக்கத்தை பிரதிபலித்தது.
அவ்வாறான உறவினர்களின் உள்மனதில் தமக்கு மருமகளாக வரவேண்டிய பெண் என்று பெரியவர்களும் தமக்கு மனைவியாக வரவேண்டிய பெண் என்று முறைப் பையன்களும் எண்ணினார்கள். ஆனால் காலம் அதனை மாற்றி அவளை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது.
அவ்வாறான உறவினர்களிடத்தில் மாத்திரம் தனியாக அக்கரை எதுவும் காட்டாமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பாவித்து அனைவருடனும் அன்புடன் நடந்து கொண்டாள் நட்சத்திர நடிகை.
நட்சத்திர தம்பதியினரைக் காண வந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கும் உறவினர்களுக்கும் கூடவே வந்திருந்த திரைப்படக் குழுவினருக்கும் என அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு மற்றும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. தம்பதியர்களைக் காண வந்து திரும்யிய அனைவருக்கும் திருமணத்தின் போது வழங்கப் படுவது போன்ற தாம்பூலப் பை வழங்கப்பட்டது.
அனைத்தும் முடிந்த பின்னர் நட்சத்திர நடிகர் தமது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அதனைத் தொடர்ந்து நடசத்திர நடிகை திரைப்படக் கலைஞர்களுக்கு உணவு பரிமாறும் தம்பதியர்களிடம் ஆசி பெற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அலங்காரம் செய்து கொண்டு கையில் பால் செம்புடன் மல்லிகை மலர்களை தலையில் சூட்டிக் கொண்டு கணவர் இல்லத்திற்குப் புறப்பட்டாள்.
அவ்வாறு சென்ற சமயம் வழக்கம் போல் கணவன் காலில் மனைவி முதலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.
ஆனால் மனைவியின் வேண்டுகோளின் படி கணவனும் மனைவியும் சேர்ந்து சவ்வு மிட்டாய் விற்பதற்கு தந்தையுடனேயே இருந்து வந்த கைதட்டும் பொம்மை உள்ள அந்த மூங்கில் (தற்போது Capital Asset எனச் சொல்லப்படும்) முன்னர் இருவரும் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர்.
காரணம் அவரது தந்தை பாடிய பாட்டினை அவரது குரலில் திரைப்படத்தில் பாடிய காரணத்தாலும் அந்தப் பாட்டு அவரது முதல் படத்தில் டைட்டில் பாடலாக வந்தமையாலும் அந்தப் பாட்டு அவருக்கு திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பாடகர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்ததோடு முன்னணி திரைப்பட நட்சத்திரமாகவும் மாற்றியது தான். தமது வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறி நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைவான புகழுடனும் வாழ ஆசீர்வதிக்க வேண்டும் என இருவரும் வேண்டிக் கொண்டனர்.
பின்னர் பல திரைப்படங்களில் நடித்த காட்சிகளை மனதில் முன் கொண்டு வந்து அதே போல கணவன் கால்களில் மனைவி விழுந்து வணங்கி அதன் பின்னர் மிகச் சந்தோஷமாக மிக மிகச் சந்தோஷமாக முதலிரவினை முடித்தனர்.
கட்டில் இல்லை மெத்தை இல்லை ஏசி இல்லை. மணமகள் சார்பாக புதிதாக ஜமுக்காளமும் தலையணையும் போர்வையும் இனிப்பு பதார்த்தங்களும் திரைப்படத்தில் உணவு பரிமாறும் தம்பதியர் குடும்பத்தார் நடிகையின் விருப்பப்படி பரிசாக அளித்து இருந்தனர்.
படப்பிடிப்பிலே உள்ள சௌகர்யங்கள் மற்றும் தற்போது சென்னையில் வாழ்ந்து வரும் வீட்டில் உள்ள சௌகர்யங்கள் என எந்த விதமான சொகுசான வசதிகளும் இல்லாத போதும் கூட மாமனார் வீட்டில் மாமனார் ஆசீர்வாதத்துடன் ஊர் மக்களின் பேராதரவுடன் தமது ஆசை நிறைவேறியதை மனதில் எண்ணி நட்சத்திர நடிகை மிக்க சந்தோஷம் அடைந்தாள். அதை விட இரட்டிப்பு சந்தோஷம் நட்சத்திர நடிகருக்கு. காரணம் எந்த நிலையிலும் பழையனவற்றை நினைவு கூர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் நல்ல குணம் கொண்ட பெண் தமக்கு வாழ்க்கைத் துணைவியாக கிடைத்தது.
அதன் பின்னர் நான்கைந்து நாட்கள் அந்த வீட்டிலேயே தங்கி அதிகாலையில் நடிகை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு கைதட்டும் பொம்மை உள்ள மூங்கிலுக்கு முன்னர் விளக்கேற்றி வழிபாடு செய்து நட்சத்திர தம்பதியினர் இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
அச்சமயம் அவர்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசாரம் செய்து இருவரும் மிக மிகச் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.
அவ்வாறு வந்து திரும்பிய அனைவரும் இருவரும் இவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தும் நிறைய புகழ் மிக்கவர்களாக இருந்தும் கூட யாரையும் ஏளனம் செய்யாமல் எல்லோரையும் ஒரே மாதிரி உபசரித்தது கண்டு பேரானந்தம் கொண்டு வாழ்த்தினர்.
நட்சத்திரத் தம்பதியினர் தமது முதலிரவினை சொந்தமாக உள்ள மூதாதையர் அதாவது நடிகரது தந்தை வீட்டில் முடித்த பின்னர் நலமுடன் சென்னை திரும்பினர். சொந்த ஊரில் நடந்த முதலிரவுக்குப் பின் மீண்டும் சென்னைக்குத் திரும்புமுன்னர் மாத்தில் ஒரு முறையாவது இந்த இடத்திற்கு வந்து இரண்டொரு நாட்கள் தங்கிச் செல்வது என முடிவு செய்தனர்.
அதற்குப் பின்னர் அவர்கள் சொந்தமாக வாங்கிப் போட்டுள்ள கொடைக்கானலிலுள்ள பங்களாவிலும் ஊட்டியிலுள்ள பங்களாவிலும் தங்கி உல்லாசமாக சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இயற்கை அழகினை ரசித்த பின்னர் மீண்டும் சென்னையிலுள்ள இல்லத்திற்கு திரும்பினா
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல நட்சத்திரத் தம்பதியினர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்ட போதிலும் அவர்கள் தங்கியிருந்த நாட்களையும் அவர்கள் தங்கியிருந்த சமயம் நடைபெற்ற சம்பவங்களையும் தம்பதியர் இருவரும் அனைவரிடத்திலும் நடந்து கொண்ட பக்குவமான விதத்தினையும் ஊர் மக்கள் திரும்பத் திரும்ப ஒருவரிடம் மற்றொருவர் சொல்லி நினைவு படுத்திக் கொண்டு இருந்தனர்.
சென்னைக்குத் திரும்பிய தம்பதியர் சில வாரங்கள் குழந்தை திருச்செல்வியுடன் சந்தோஷமாக கழித்து விட்டு மீண்டும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினர். மீண்டும் அதே ஜோடி தொடர்ந்து. பல படங்கள்.
.
No comments:
Post a Comment