தாய் நாடு திரும்பி படப்பிடிப்பினை முடித்தல்
வெளி நாடுகளில் படப்பிடிப்பு மற்றும் தேனிலவு என்னும் எண்ணங்களுடன் அயல் நாடு சென்ற நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் திரும்ப இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர்.
வெளி நாடுகளில் நடந்த படப்பிடிப்பில் இரண்டு படங்கள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. ஒரே ஒரு படத்தில் மாத்திரம் ஒரு சில காட்சிகள் முழுமை பெறாமல் இருந்தன.
முழுவதும் நிறைவு பெற்ற படங்களில் எடிட்டிங் மற்றும் டப்பிங் ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இரண்டு திரைப்படங்களும் வெளி வருவதற்கு திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் பெறுவதன் பொருட்டு தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப் பட்டு விட்டன.
இன்னும் ஒரே ஒரு படம் மாத்திரம் நிலுவை. அந்தப் படத்தில் திரைப்படத்தில் கணவன் மற்றும் மனைவியாக நடிக்கும் நடசத்திரத் தம்பதியினருக்கு பிறந்த குழந்தை தேவை.
கதாநாயகி மருத்துவ மனையில் குழந்தை பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டு புதிதாகப் பிறந்துள்ள பச்சிளம் குழந்தையுடன் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற வேண்டும்.
ஆனால் திரைப் படக் குழுவினர் திரைப்படத்தினை எடுத்த வெளி நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் உள்ள குழந்தைகள் வெளிர் சிகப்பு நிறத்தில் இருந்தமையால் இயக்குநர் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் சிகப்பாகவும் அல்லது வெள்ளையாகவும் அல்லது மா நிறமாகவும் அல்லது கருப்பாகவும் தான் பொதுவாக இருக்கும். ஆனால் அங்குள்ள குழந்தைகள் மிகவும் வெள்ளையாக வெளிர் நிறத்தில் இருந்த காரணத்தால் அந்தக் காட்சியினை மட்டும் இந்தியாவில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அனைவரும் இந்தியாவுக்கு திரும்பி விட்டனர்.
பச்சிளம் குழந்தையுடன் படப்பிடிப்பு நடத்தும் பொருட்டு படப்பிடிப்புக் குழுவில் இருந்தவர்கள் அழகாக சிகப்பாக உள்ள புதிதாகப் பிறந்துள்ள குழந்தைகளைத் தேடி ஒவ்வொரு மருத்துவ மனையாக அலைந்த வண்ணம் இருந்தனர்.
குழந்தை படப்பிடிப்புக் குழுவினருக்கு பிடித்திருந்தால் குழந்தையை பெற்ற தாயின் உறவினர்கள் பிறந்த குழந்தையை படப்பிடிப்பில் பயன்படுத்தினால் பிறந்த குழந்தைக்கு படப்பிடிப்பு காட்சியின் போது காமிராவிலிருந்து வருகின்ற மிகவும் சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்கள் குழந்தையின் கண்களை குருடாக்கி விடும் என்று சொல்லி குழந்தைகளை கொடுக்க மறுத்தனர்.
அதே சமயம் படப்பிடிப்பின் போது குழந்தையினை பயன் படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் தாய்மார்கள் மற்றும் உறவினர்களின் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் நிறம் மற்றும் முகசாயல் நட்சத்திர தம்பதியினருடன் ஒத்துப் பார்க்கும் போது முற்றிலும் பொருந்தாமல் இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சம்மந்தமே இருக்காது. அவ்வாறான குழந்தைகளை படப்பிடிப்பில் பயன் படுத்த படப் பிடிப்புக் குழுவினர் தவிர்த்தனர்.
திரைப்படக் குழுவினர் தாய் நாடு திரும்பி இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் நடச்த்திரத் தம்பதியினருக்கு பொருத்தமான குழந்தை கிடைக்காமையால் படப் பிடிப்பு தாமதமானது. இந்த நிலையில் அனைத்து மருத்துவ மனைகளிலும் பணியாற்றும் டாக்டர்களிடத்திலும் செவிலியர்களிடத்திலும் இந்த விவரம் தெரியப் படுத்தி சிகப்பாக அழகாக குழந்தை பிறந்தால் தம்மிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
ஒரு நாள் வெள்ளிக் கிழமை. திரைப்படக் குழுவினருக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல ஒரு குழந்தை பிறந்து இருப்பதாகவும் குழந்தையின் தாயார் மயக்க நிலையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மருத்துவ மனையை அணுகி குழந்தையை பெற்ற தாயின் மயக்கம் தெளிவதற்குள் நட்சத்திர நடிகையை அருகில் உள்ள படுக்கையில் படுக்க வைத்து படப்பிடிப்பினை முடித்து விடலாம் என்று தம்பதிகள் இருவருக்கும் தெரிவித்தனர்.
நட்சத்திரத் தம்பதிகள் இருவரும் நேரில் வந்து குழந்தையை பார்த்தவுடன் அவர்களும் அந்த குழந்தை அழகாக உள்ளது எனவே படப்பிடிப்பின் போது இந்த குழந்தையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று மிக மிக சந்தோஷமாகத் தெரிவித்தனர்.
அதே சமயம் குழந்தையைப் பெற்ற தாயின் மயக்கம் தெளியாமல் அந்தக் குழந்தையை பெற்றது போல நடிப்பதற்கு நட்சத்திர நடிகை மறுத்து விட்டார். இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் உள்பட தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அச்சமயம் கதாநாயகி எனக்கு ஒரு நாள் மாத்திரம் அவகாசம் தாருங்கள் நானே குழந்தையை பெற்ற தாயிடம் நேரில் பேசி அதன் பின்னர் உங்களுக்கு சாதகமான முடிவினை தெரிவிக்கின்றேன் என்று சொன்னார். அதன் படி திரைப்படக் குழுவினர் காத்திருந்தனர்.
திரைப்படக் குழுவினர் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கு ஸ்பெஷல் வார்டு அதாவது தனி அறை ஒதுக்கீடு செய்யக் கேட்டுக் கொண்டு அதற்கான கட்டணம் முழுவதையும் செலுத்துவது என்று தீர்மானித்த காரணத்தால் நட்சத்திர நடிகை குழந்தைக்கு அருகிலும் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு அருகிலும் காத்திருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்தார்.
குழந்தையை பெற்றெடுத்த தாயின் மயக்கம் தெளியும் சமயம் நட்சத்திர நடிகையின் கரங்களில் குழந்தை இருந்ததைக் கண்டு குழந்தையின் தாய் பேரானந்தம் அடைந்தார். அதன் பின்னர் நடசத்திர நடிகை குழந்தையை பெற்ற தாயிடம் பேசினார்.
அப்போது அந்த தாய் தனக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தன்னுடைய கணவர் நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை வயிற்றில் சுமக்கும் சமயம் திடீரென வாகன விபத்தில் காலமாகி விட்டார் எனவும் தமக்கு உறவினர்கனோ நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ யாரும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அச்சமயம் நட்சத்திர நடிகை தமது வருகை பற்றி அவரிடம் தெரிவித்த போது அவருக்கு மிக்க சந்தோஷம். எனக்கு எதிர்காலம் இருண்டது போல இருந்தது. இந்தக் குழந்தை பிறந்த வேளை எனக்கு கடவுள் உங்கள் மூலமாக நல்வழி காட்ட ஆரம்பித்துள்ளார் என்று மிக்க சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார்..
நீங்கள் என் குழந்தையை படப்பிடிப்பின் போது தாராளமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். படப்பிடிப்பு தளத்திற்கு நானே வந்து என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து குளிப்பாட்டி பொட்டு வைத்து அழகாக உங்கள் கரங்களில் கொடுத்கின்றேன்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயம் குழந்தை அழுதாலோ அல்லது பசியினால் துடித்தாலோ நான் அருகில் இருந்து தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் அழுகை நின்ற பின்னர் மீண்டும் உங்களிடம் கொடுக்கின்றேன்.
படப்பிடிப்பு நன்றாக அமையும் வரையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் உங்களுடன் நான் தங்கி இருக்கின்றேன் என்று மிக மிக சந்தோஷமாக தெரிவித்தார்.
அதன் பின்னர் குழந்தையையும் குழந்தையை பெற்றெடுத்த தாயாரையும் மருத்துவ மனையிலிருந்து அழைத்து வந்து நட்சத்திரத் தம்பதியினர் தமது வீட்டில் வைத்துக் கொண்டனர்.
படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்தது. செயற்கையாக ஒரு மருத்துவ மனை. கட்டில் மெத்தை தலையணை தொட்டில் மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள்.
முதலிரவே நடக்காத நட்சத்திர நடிகைக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்தது போன்ற ஒரு காட்சி. நடிப்பு என்று வந்து விட்டால் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் இயக்குநர் என்ன சொல்கின்றாரோ அதன்படி செய்தாக வேண்டும். இயக்குநர் என்ன சொன்னாரோ அதன்படி நட்சத்திர நடிகையின் கரங்களில் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வருவது போல காட்சி படமாக்கப்பட்டது
அப்போது புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கும் நட்சத்திர நடிகைக்கும் ஆரத்தி காட்டி நட்சத்திர தம்பதியின் சொந்த இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் சமயம் நட்சத்திர நடிகை உண்மையில் தான் குழந்தை பெற்று இல்லம் திரும்புவது போல உணர்ந்தாள். இந்தக் காட்சி ஸ்டுடியோவில் நடைபெறாமல் நட்சத்திரத் தம்பதியர் இல்லத்திலேயே நடைபெற்றது.
புதிதாகப் பிறந்துள்ள குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து தாலாட்டுவது போலவும் குழந்தையை தம்மருகில் படுக்க வைத்துக் கொள்வது போலவும் படக் காட்சிகள் அமைந்தன.
புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கு திரைப்படத்தில் என்ன பெயர் வைப்பது என்று யோசித்தார்கள். குழந்தையை பெற்ற தாயிடம் கேட்டதற்கு குழந்தையின் தாய் நட்சத்திரத் தம்பதியினர் என்ன பெயர் வைத்தாலும் தமக்கு பரிபூரண சம்மதம் என்று தெரிவித்தார்.
அதன் படி இருவரும் பெயர் தேடலில் ஈடு பட்டனர். இதுவரையில் இல்லாத பெயராக இருக்க வேண்டும். ஆனால் பெயர் கேட்பதற்கு இனிமையாக தமிழ் பெபயராக இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு பலப்பல நபர்களிடம் ஆலோசனை கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன பெயர்கள் எதுவாக இருந்தாலும் அந்த பெயர் வேறு யாருக்கொ எப்போதோ அல்லது எந்த ஊரிலோ பயன் பாட்டில் இருந்து கொண்டு தான் இருந்தது.
இந்த நிலையில் கதாநாயகி ஒரு பெயரினை சொன்னாள். அது என்னவெனில் கதாநாயகன் பெயருக்கு எந்தக் கடிதம் வந்தாலும் அந்தப் பெயருக்கு முன்னால் திரு என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதே போல கதாநாயகிக்கு எந்தக் கடிதம் வந்தாலும் அந்தக் கடிதத்தில் திருமணத்திற்கு முன்னர் அவளது பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிடப் பட்டிருக்கும்.
எனவே நட்சத்திரத் தம்பதியினருக்கு திருமணத்திற்கு முன்னர் அவர்களுக்கு வந்த கடிதங்களில் பெயர்களுக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த திரு மற்றும் செல்வி ஆகியவற்றை இணைத்து புதிதாக
திருச்செல்வி
என்று பெயர் வைப்பது என்று தீர்மானித்தனர். அதன் படி அந்தப் படத்தில் நடித்த அந்தக் குழந்தைக்கு திருச்செல்வி என்று பெயர் சூட்டப்பட்டது.
திரைப்படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் இருவரும் டப்பிங் சமயம் குரல் கொடுத்து திரைப்படத்தினை பூர்த்தி செய்தனர். அதே சமயம் குழந்தையின் அழுகையை அப்படியே ஒலிப்திவு செய்து திரைப்படத்தில் இணைத்து டப்பிங் முடித்தனர். திரைப்படம் விரைவில் வெளி வந்தது. இருவருடைய குரல் வளமும் குழந்தையின் உண்மையான அழுகை ஓசையும் அந்தப் படத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டின.
மூன்று படங்களும் மீண்டும் நன்றாக ஓடி நல்ல வசூல் சாதனையக் கொடுத்தன.
அந்த சமயத்தில் குழந்தை தம்முடனேயே இருக்க வேண்டும் என்னும் எண்ணம் வளர ஆரம்பித்தது. அந்த விவரத்தை குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் தெரிவித்த சமயம் எனக்கு எந்த வித சொந்தமும் இருப்பிடமும் இல்லாத காரணத்தால் அங்கேயே சமையலறையிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறிய அறையிலோ வேறு பணியாளர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தால் போதும் என்று சொன்னது கேட்ட நட்சத்திர தம்மபதியினர் இருவரும் மிக்க சந்தோஷமடைந்தனர்.
முதலிரவு நடக்காமலே கைக் குழந்தையுடன் வருவது போன்ற காட்சியில் தத்ரூபமாக நடித்த காரணத்தால் நட்சத்திர நடிகைக்கு மிக்க ஆனந்தம் மற்றும் பூரிப்பு. அந்தப் படத்திற்கு சிறந்த படம் சிறந்த நடிப்பு சிறந்த நடிகை போன்ற பலப்பல விருதுகள் குவிந்தன.
No comments:
Post a Comment