WELCOME நல்வரவு स्वागत हे
Welcome to "superstarheroine.blogspot.com"
R.R.JAGADEESAN R.R.ஜெகதீசன் R.R.जगदीसन
Visit my another blogspot about GST Taxation "abhivirthi.blogspot.com" Visit my another blogspot about Intimacy of love even after marriage "myloverismyangel.blogspot.com" Visit my another blogspot about Relations without relationship "relationswithoutrelationship.blogspot.com" Visit my another blogspot about GST Taxation "geeyestee.blogspot.com" Visit my another blogspot about Marriage Delay Remedy Solution Pooja at Home "marriagepooja.blogspot.com" Visit my another blogspot about Latest Inventions in Ancient Days "identicalinventions.blogspot.com" THANK YOU VERY MUCH FOR YOUR VISIT AND BOOKMARKING THIS BLOGSPOT FOR FREQUENT VISITS. SHARE THE ARTICLES WITH YOUR COLLEAGUES AND FRIENDS. TO VIEW MORE ARTICLES PLEASE VISIT AGAIN AND AGAIN. R.R. JAGADEESAN-----தாங்கள் இந்த வலைப்பதிவினை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. வலைப் பதிவு மற்றும் வலைப்பதிவிலுள்ள தகவல்களை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவினை மீண்டும் பார்வையிட கனிவான வேண்டுகோள். வருக வருக. மீண்டும் மீண்டும் வருக வருக.. ஆர். ஆர். ஜெகதீசன்
CLICK THE LINK BELOW TO VIEW "MY LOVER IS MY ANGEL" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "என் காதலி என் தேவதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
1. First Love Acceptance : முதல் சம்மதம் 2. First Touch : முதல் ஸ்பரிசம் 3. I belongs to you, You belongs to me, The city belongs to us : நான் உனக்கு சொந்தம். நீ எனக்கு சொந்தம். ஊரே நமக்கு சொந்தம் 4. First Love Gift : முதலாவது பரிசு 5. First Prayer : முதலாவது வழிபாடு 6. Prayer for Child : குழந்தை பாக்கியம் 7. Elder Blessings : உறவினர் நல்லாசி 8. Our first sadness : எங்களது முதல் சோகம் 9. First joint marriage discussion with my angel : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளும் நானும் சேர்ந்து) 10. Joint Prayer by us : இருவர் வழிபாடு 11. First marriage discussion with parents : முதலாவது திருமண கலந்தாய்வு (எனது பெற்றோர்களுடன்) 12. First marriage discussion with her mom : முதலாவது திருமண கலந்தாய்வு (அவளது தாயாருடன்) 13. My loss of my angel : என் தேவதையின் பிரிவு 14. First happiness after her marriage : திருமணத்திற்குப் பின்னர் அவளது முதல் சந்தோஷம் 15. Choosing name for child before birth : குழந்தைக்குப் பெயர் தேடல் 16. My mother's sadness and happiness : என் தாயாரின் வருத்தமும் சந்தோஷமும் 17. Not participating any functions or celebrations : எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமை 18. First Female Child : முதலாவது பெண் குழந்தை 19. Little angel to my angel : தேவதைக்கு ஒரு குட்டி தேவதை 20. Bride Search : பெண் பார்க்கும் படலம் 21. Parents Own House : பெற்றோர் சொந்த வீடு 22. Joyful meeting : சந்தோஷமான சந்திப்பு 23. My Angel's Appreciation : என் தேவதையின் பாராட்டுதல்கள் 24. Bride Search Discussion : பெண் பார்ப்பதற்கு முன் ஒரு கலந்துரையாடல் 25. Marriage Invitation : திருமண அழைப்பு 26. House Warming : வீடு பார்த்துக் குடியேறுதல் 27. Happiness and Unhappiness of us : அளவுக்கு அதிகமான சந்தோஷம் மற்றும் சோகம் 28. Planning for Future : எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடல் 29. Marriage arrangements to my Little Angel : குட்டி தேவதைக்கு திருமண ஏற்பாடுகள் 30. Demise of Angel's Spouse : தேவதையின் கணவர் மறைவு 31. Love Marriage of My Angel's son : தேவதையின் மகனுக்கு காதல் திருமணம் 32. Same thought in both hearts : இரண்டு இதயங்களுக்குள் ஒரே எண்ணம் ஒரே சிந்தனை 33. Financial Crisis and its remedies in families : குடும்பத்தில் ஏற்படும் பணக் கஷ்டமும் அதற்கான நிவர்த்தியும் 34. Marriage Delays and its remedies : திருமணத் தடைகளும் அவற்றிற்கான பரிகாரங்களும் 35. Prayers for purchase of own house property : சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள் 36. Loneliness in Palace : அரண்மனையில் தனிமை - கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை 37. House Construction Work : வீடு கட்டும் பணிகள் 38. Happiness Again : மீண்டும் ஒரு சந்தோஷம் 39. Meeting for Long Duration goodbye : நீண்ட நாட்களுக்கு பிரியா விடை சந்திப்பு
CLICK THE LINK BELOW TO VIEW "LOVE STORY" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "காதல் கதை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
01. Nostalgia for my lover's absence : என்னைக் காண என் காதலர் வராத ஏக்கம் 02. First Introduction : முதல் அறிமுகம் 03. First desire : முதல் விருப்பம் 04. First Word : முதல் வார்த்தை 05. First Day Game : முதல் நாள் விளையாட்டு 06. First Day Game continuity : முதல் நாள் விளையாட்டு தொடர்ச்சி 07. Lonelyness due to opening of Schools : பள்ளிகள் திறந்தமையால் தனிமை 08. Evening Classes : மாலை வகுப்புகள் 09. First meet with his Mom : முதன் முறையாக அவரது தாயாரை சந்தித்தது 10. First time prayer with his mom in temple : முதன் முறையாக அவரது தாயாருடன் கோயிலில் வழிபாடு 11. First expression of expectations : எதிர்பார்ப்புகளின் முதல் வெளிப்பாடு 12. First acceptance from mom : தாயாரின் முதல் சம்மதம் 13. Future dreams : எதிர் காலக் கனவுகள் 14. One about another : ஒருவரைப் பற்றி மற்றொருவர் 15. First cooking : முதல் சமையல் 16. Success in School Examination : பள்ளித் தேர்வில் வெற்றி 17. First Tour : முதல் சுற்றுலா 18. Pilgrimage First Day : புனித யாத்திரை முதல் நாள். 19. Pilgrimage Second Day : புனித யாத்திரை இரண்டாம் நாள் 20. Pilgrimage Third Day : புனித யாத்திரை மூன்றாம் நாள் 21. Pilgrimage Fourth Day : புனித யாத்திரை நான்காம் நாள் 22. Distribution of Temple Prasadams : கோயில் பிரசாதங்கள் விநியோகம் 23. First Acceptance and First Touch : முதல் சம்மதம் மற்றும் முதல் ஸ்பரிசம் 24. First Advise and Birth Day Gift : முதலாவது அறிவுறை மற்றும் பிறந்த நாள் பரிசு 25. Relationship Strengthened : உறவு வலுவடைந்தது 26. Deep Prayers : ஆழமான பிரார்த்தனை 27. Government Job : அரசாங்க வேலை 28. Isolation Again : மீண்டும் தனிமை 29. Anger on Father : தந்தை மீது கோபம் 30. Wait and Watch : எதிர் பார்த்துக் காத்திருத்தல் 31. My Thoughts Before Sleeping : தூங்குவதற்கு முன் எனது எண்ணங்கள் 32. Expectation and Disappointment : எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் 33. Meet Again : மறுபடியும் சந்தித்தல் 34. Second Joyful Meet : இரண்டாவது மகிழ்ச்சியான சந்திப்பு 35. Remembrance of Past Periods : கடந்த காலங்களின் நினைவு 36. Lack of Courage or Cowardness : தைரியம் இல்லாமையா அல்லது கோழைத் தனமா? 37. Birth Day and Searching Name for Child : பிறந்த நாள் மற்றும் குழந்தைக்குப் பெயர் தேடல் 38. Visit of His Mom : அவரது தாயார் வருகை 39. Seemantham or Bangle Ceremony during Pregnancy : வளைகாப்பு 40. Child Delivery between Train Journey : இரயிலில் பயணத்தின் இடையே குழந்தை பிரசவம் 41. Future Plans not Fulfilled : எதிர் காலத் திட்டங்கள் நிறைவேறவில்லை 42. Frustration in Life : வாழ்க்கையில் விரக்தி 43. First Meet After Delivery : பிரசவத்திற்குப் பின் முதல் சந்திப்பு 44. Bride Search : மணமகள் தேடல் 45. Bride Search Difficulties : மணமகள் தேடலில் சிரமங்கள் 46. Long Conversation without Tears : கண்ணீர் இல்லாமல் நீண்ட உரையாடல் 48. Counselling for choosing Right Bride : சரியான மணமகள் தேர்வு செய்ய ஆலோசனை 49. Normal Conversation : சாதாரண உரையாடல் 50. Going to Home for Surgery : அறுவை சிகிச்சைக்கு சொந்த ஊர் செல்லுதல் 51. Return to Work Place after Surgery : அறுவை சிசிச்சைக்குப் பின் பணியிடம் திரும்புதல் 52. Secret of Daughter's Name and Bride Search : மகளின் பெயர் ரகசியம் மற்றும் வரன் பார்த்தல் 53. Unexpected Conversation : எதிர்பாராத உரையாடல் 54. Jasmine Flower Strings and Wheat Halwa : மல்லிகை பூவும் ஹல்வாவும் 55. Mother's House ; அன்னை இல்லம் 56. Final Conclusion in Bride search : மண மகள் தேடலில் இறுதி முடிவு 57. Betrothal : நிச்சயதார்த்தம் 58. Again Nostalgia : மீண்டும் ஏக்கம் 59. Conversation without satisfaction : திருப்தி இல்லாமல் உரையாடல் 60. Conversation about Love Failure with my relative : என் உறவினருடன் காதல் தோல்வி பற்றிய உரையாடல் 61. Wedding Invitation : திருமண அழைப்பிதழ் 62. Anxiety like Loss< : இழப்பு போன்ற கவலை 63. Last meeting with him before his marriage : திருமணத்திற்கு முன் அவருடன் கடைசி சந்திப்பு 64. Valentine's Wedding is Intolerate Tragedy : காதலர் திருமணம் என்பது தாங்க முடியாத சோகம் 65. First Meet After Marriage : திருமணத்திற்குப் பின்னர் முதல் சந்திப்பு 66. Intimacy of his mother with me : என்னுடன் அவரது தாயாரின் நெருக்கம் 67. Even After Marriage Saree Gift : திருமணத்திற்குப் பின்னரும் கூட சேலை பரிசு 68. Wedding Gift : திருமணப் பரிசு 69. Doubt Spoils Happiness : சந்தோஷத்தைக் கெடுக்கும் சந்தேகம் 70. What Will be the Next? : அடுத்தது என்னவாக இருக்கும்? 71. Late and Hasty Decisions will Spoil the Future ; தாமதமான மற்றும் அவசர முடிவுகள் எதிர்காலத்தை கெடுக்கும். 72. Feelings Like Loneliness : தனிமை போன்ற உணர்வுகள் 74. Double Happyness ; இரட்டிப்பு சந்தோஷம் 75. Pongal Festival : பொங்கல் பண்டிகை 76. Intimate Relationship : நெருக்கமான உறவு 77. Wrong Decisions due to Overconfidence : அதிக நம்பிக்கையினால் தவறான முடிவுகள் 78. Life without Interest : ஆர்வம் இல்லாத வாழ்க்கை 79. Last Deepawali Gift : கடைசி தீபாவளிப் பரிசு 80. Unbearable Tragedy : தாங்க முடியாத சோகம் 81. Unforgettable Memories : மறக்க முடியாத நினைவுகள். 82. Marriage Arrangements to Daughter : மகளுக்கு திருமண ஏற்பாடுகள் 83. Daughters' Marriages and Ill-health : மகள்களின் திருமணங்கள் மற்றும் உடல் நலக் குறைவு 84. Hard Times for Both : இருவருக்கும் கடினமான காலம் 85. How to Prevent Loss in Business? : வணிகத்தில் இழப்பைத் தடுப்பது எப்படி? 86. Invisible Companion : கண்ணுக்குத் தெரியாத துணை 87. How to Choose a Life Partner? : வாழ்க்கை துணையை தேர்வு செய்வது எப்படி? 88. Mutual Exchange of Happenings : நிகழ்வுகளின் பரஸ்பர பரிமாற்றம். 89. The Glory of the Temple Steps : கோவில் படிகளின் மகிமை 91. Temples, Churches, Mosques and Places of Worship : கோவில்களும் ஆலயங்களும் பள்ளிவாசல்களும் வழிபாட்டுத் தலங்களும் 92. Homams and Yagams : ஹோமங்களும் யாகங்களும் 93. Conversation about the marriage of the son : மகனின் திருமணம் பற்றிய உரையாடல் 94. Son's Marriage : மகனின் திருமணம் 95. Decrease of Intimacy due to Family Members : குடும்ப உறுப்பினர்கள் காரணமாக நெருக்கம் குறைதல் 96. His Arrival is Expected : அவரது வருகை எதிர்பார்க்கப் படுகின்றது 97. Labor Pain and Abdominal Pain : பிரசவ வலியும் வயிற்று (பொய்) வலியும் 98. Minimizing Frequent Visits : அடிக்கடி வருகைகளைக் குறைத்தல் 99. Conversation After Long Interval : நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உரையாடல் LAST ARTICLE. Bamboos Used During Construction : முட்டுக் கொடுத்த மூங்கில்கள்
CLICK THE LINK BELOW TO VIEW "DESIRED LIFE AND REAL LIFE" ARTICLES IN TAMIL------கீழ்க் காணும் இணைப்பினைக் கிளிக் செய்து "விரும்பிய வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கை" வலைப் பதிவுகளை தமிழில் காணுங்கள்
001. Schoolmate : பள்ளித் தோழி 002. Schoolmate : பள்ளித் தோழன் 003. Grandmothers' Affection : ஆச்சிகளின் பாசம் 004. Six to Sixty Years : ஆறு முதல் அறுபது வரை 005. You too late : நீங்கள் மிகவும் தாமதம் 006. Job Opportunity during Flight Travel : விமான பயணத்தின் போது வேலை வாய்ப்பு 007. Familiar Voice : பரிட்சயமான குரல் 008. Stock Trading and Share Market : பங்கு வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை 009. Love Memories : காதல் நினைவுகள். 010. Divorce Withdrawal : விவாகரத்து திரும்பப் பெறுதல் 011. Marriage Blessings From God : கடவுளிடமிருந்து திருமண ஆசீர்வாதம் 012. Betel Garland and Vadai Garland : வெற்றிலை மாலையும் வடை மாலையும் 013. King and Queen Plate : ராஜா ராணி தட்டு 014. Alimony : ஜீவனாம்சம் 015. Two Solutions for the Same Problems (Solution-1) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-1) 016. Two Solutions for the Same Problem (Solution-2) : ஒரே பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள். (தீர்வு-2) 017. Love because of Misunderstanding : தவறான புரிதலின் காரணமாக காதல் 018. Bliss is Rapture : பேரின்பம் பேரானந்தம். 019. First Love is Mightgier than all Relations : அனைத்து உறவுகளையும் விட முதல் காதல் வலிமையானது 020. Astrology Succeeded : ஜோதிடம் வெற்றி பெற்றது 021. Unforgetable Memories : மறக்க முடியாத நினைவுகள் 022. Actual Life and Imagination Life : உண்மையான வாழ்க்கை மற்றும் கற்பனை வாழ்க்கை 023. House Warming Ceremony : கிரஹப் பிரவேசம் 024. Anxiety and Happiness : கவலையும் மகிழ்ச்சியும் 025. Unexpected Betrothal and Sudden Marriage : எதிர்பாராத நிச்சயதார்த்தம் மற்றும் திடீர் திருமணம். 026. Kunkumam Casket : குங்குமச் சிமிழ் 027. The Glory of the Lamps : விளக்குகளின் மகிமை 028. The Heart Never Forgets : நெஞ்சம் மறப்பதில்லை 029. Unstable Income : நிலையில்லா வருமானம். 30. Job Looking Foil : வேலை தேடும் படலம்

Sunday, 22 December 2019

Adoptation of Child : குழந்தை தத்தெடுப்பு

குழந்தை தத்தெடுப்பு


தேனிலவு மற்றும் படப்பிடிப்பு என இரண்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு வெளி நாடு சென்ற நட்சத்திரத் தம்பதியினர் மீண்டும் இந்தியா திரும்பி நடிகரது தந்தை வீட்டில் முதலிரவு நடந்தேறிய பின்னர் இருவரும் மீண்டும் திரைப் படங்களில் நடிக்கத் துவங்கினர்.

கதாநாயகன் ஒரு படத்தில் ஒரு கதாநாயகியுடனும் மறு படத்தில் வேறு ஒரு கதாநாயகியுடனும் நடிக்க வேண்டியிருந்தால் இருவரும் சேர்ந்து நடிக்கும் நாட்களை சரியாக முன்கூட்டியே தீர்மானித்து அந்த குறிப்பிட்ட நாட்களில் தான் படப்பிடிப்பு மேற்கொள்ள இயலும்.  ஒரு கதாநாயகன் ஐந்து திரைப்படங்களில் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு கதாநாயகிகளுடன் நடித்துக் கொண்டிருந்தால் அந்த ஐந்து கதாநாயகிகள் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காத நாட்களில் மட்டும் தான் இருவரும் சேர்ந்து நடிக்க முடியும். இதன் காரணமாக ஒரு திரைப்படம் வெளி வர நீண்ட நாட்கள் பிடிக்கும்.

அதே சமயம் ஒரு திரைப் படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து விட்டால் அவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படும் பட்சத்தில்; அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் படமாக்க திரைப்படக் கால்ஷீட்டுகளுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே நாளில் இருவரும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அதன் படி திரைப் படங்களில் நடித்தால் ஒரு திரைப்படம் மிக மிக குறுகிய காலத்திற்குள் வெளி வரும் வாய்ப்புகள் அதிகம்.


கதாநாயகனோ அல்லது கதாநாயகியோ அல்லது இருவருமோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நாட்களில்  திரைப்படத்தில் வருகின்ற நகைச் சுவைக் காட்சிகளையோ அல்லது துணைக் கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளையோ படமாக்க முடியும்.  கதாநாயகி இல்லாமல் கதாநாயகன் மட்டும் நடிக்கும் சண்டைக் காட்சிகளையும் கூட  படமாக்க முடியும்.  அதே போல கதாநாயகன் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் காட்சிகளை கதாநாயகியை மட்டும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியும்.  

இருவரும் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்கள். இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து விட்டனர். எனவே ஒரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் கால்ஷீட் கேட்டுவரும் சமயம் இருவரும் சேர்ந்து கால்ஷீட் கொடுத்து இருவரும் சேர்ந்து நடித்து இரண்டு வருட காலத்திற்குள் முப்பது திரைப்படங்கள் வெளி வந்தன. இரவு பகல் என்று பாராமல் கடினமாக உழைத்து இரண்டே வருடங்களில் முப்பது வெற்றிப் படங்களை அளிக்க முடிந்தது என்பது ஒரு உலக சாதனை.

அவ்வாறு நடித்துக் கொண்டிருக்கும் சமயம் இரண்டு படங்களில் கதாநாயகிக்கு குழந்தை மீது பாசம் அதிகம் இருப்பதாகவும் குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்வதாகவும் காட்சிகள் அமைய வேண்டும்.  அவ்வாறான காட்சிகளுக்காக அவர்களின் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வளர்ந்து வரும் குழந்தையான திருச்செல்வி தேர்வு செய்யப்பட்டாள்.

திரைப்பட இயக்குநர் குழந்தையிடம் கதாநாயகியைப் பார்த்து “அம்மா” என்று சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். பிஞ்சுக் குழந்தை தன் மழலை மொழியில் கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று முதல் முறையாகச் சொல்லும் சமயத்தில் தமது சொந்தக் குழந்தையே தம்மை அம்மா அம்மா என்று அழைப்பதாகக் கருதி குழந்தையை உணர்ச்சி பொங்க கட்டித் தழுவி திரைப்படப் பிடிப்பு என்பதனை மறந்து முத்தமிட்டாள்.  இன்னும் சொல்லப் போனால் அந்த பிஞ்சுக் குழந்தை தம்முடையது என்னும் எல்லைக்கே போய் விட்டாள். 

திரைப் படப் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தை தன்னையும் அறியாமல் கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று அழைத்த குரல் கேட்ட கதாநாயகிக்கு மிக்க சந்தோஷம். கதாநாயகிக்கு வந்த சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தட்டுத் தடுமாறி நின்றாள்.

இந்தக் காட்சியைக் கண்ட குழந்தையினைப் பெற்றெடுத்த தாய் குழந்தையை அவர்களிடத்தில் எடுத்துக் கொடுத்து குழந்தை உங்களை அம்மா அம்மா என்று அழைக்கின்றது என்பதற்காக நான் எதுவும் கவலைப்பட மாட்டேன். நீங்கள் என்னுடைய குழந்தை எப்படி அழைத்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த சமயம் திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்தாள்.

உடனே குழந்தையின் தாயினை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து உடல் நலம் தேறியவுடன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.  மருத்துவ மனையில் நோயாளிகள் பிரிவில் குழந்தைகளை அனுமதித்தால் குழந்தைக்கு தொற்று நோய் வந்து விடும் எனக் கூறி குழந்தையை வீட்டிலேயே வைத்துக் கொள்ளும் படி கூறிய படியால் குழந்தையைப் பெற்ற தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதிலிருந்து வீடு திரும்பும் வரை குழந்தை திருச்செல்வி கதாநாயகியின் அறையிலேயே அருகில் இருந்தாள். 

கதாநாயகிக்கும் குழந்தைக்கும் இடையே மிக மிக நெருக்கமான பந்த பாசம் ஏற்பட்டு விட்டது.  குழந்தையின் தாய் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் குழந்தை நடிகையிடமே இருக்க விருப்பப் பட்டது. குழந்தையின் தாயும் உடல் அசதியின் காரணமாக குழந்தையை அருகில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் குழந்தையை கதாநாயகி நடிகையிடமிருந்து பிரிக்கவும் விரும்பவில்லை காரணம் தமது நோய் குழந்தைக்கு வந்து விடக் கூடாது என்னும் பயம்.

இந்த கால கட்டத்தில் நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் படப்பிடிப்புக்குச் செல்லும் சமயம் குழந்தையையும் கூட அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர்.  குழந்தை ஒரு பக்கம் யாருடனாவது விளையாடிக் கொண்டிருக்கும் சமயம் அவர்கள் இருவரும் படப்பிடிப்பில் சுறு சுறுப்பாக இருப்பார்கள். 

அவ்வாறு இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கும் சமயம் திடீரென கதாநாயகி நடிகை மயங்கி கீழே விழுந்து விட்டாள். படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும் சமயம் அந்தச் பிஞ்சுக் குழந்தை கதாநாயகியைப் பார்த்து அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டே கதறி அழுவதைப் பார்த்த யாராலும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை.

மருத்துவ மனையில் நடிகையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கதாநாயகி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளதாகவும் திடீரென கருச்சிதைவு ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து விட்டாள் என்றும் தெரிவித்தனர்.  மருத்துவர்கள் கதாநாயகனிடம் ஆலோசனை வழங்கினர். கதாநாயகி கருவுற்ற நிலையில் திரைப்படத்தில் நடித்து வந்த சமயம் கருச்சிதைவு ஏற்பட்ட காரணத்தால் தான் மயக்கமடைந்தாள் எனவும் இனி வருங்காலங்களில் இதனைத் தவிர்க்குமாறும் ஆலோசனை வழங்கினார்கள். 

கதாநாயகன் கதாநாயகியைப் பார்த்து நீ கருவுற்ற விவரம் என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருந்தால் நான் முன்னேற்பாடாக திரைப் படங்களில் நீ நடிக்க வேண்டாம் என்று சொல்லி இருப்பேன் அல்லவா எனக் கேட்ட சமயம் கதாநாயகி தமது உண்மை நிலவரத்தை டாக்டர் முன்னிலையில் தெரிவிக்க ஆரம்பித்தாள்.  கதாநாயகி டாக்டரிடம் தமக்கு நீண்ட காலமாக அதாவது பூப்பெய்த நாள் முதல் மாதவிடாய் வருவதில் மிகுந்த கால தாமதம் காணப் பட்டதாகவும் மருத்துவர்களிடத்தில் காட்டிய சமயம் PCOD என்று சொல்லி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் தற்போதும் அதே போல காலதாமத மாதவிடாய் என்று நினைத்து விட்ட காரணத்தால் கருவுற்றது தெரியவில்லை என்றும் தெரிவித்தாள். 

கதாநாயகன் பிறந்த அன்றே தாயைப் பறிகொடுத்து விட்டதாலும் உடன் பிறந்த சகோதரிகள் மற்றும் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும் பிற பெண்களுடன் சகஜமாக பழகாததாலும் பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கை உபாதைகள் பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை.  கதாநாயகியும் தம் கணவரிடத்தில் இது பற்றி இது வரையில் வாய் திறந்து சொல்லவில்லை.

இந்த காரணத்தால் கதாநாயகி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சுமார் பதினைந்து நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டாள்.  

குழந்தை நட்த்திரம் திருச்செல்வியின் தாய்க்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவ மனைக்கு கொண்டு போய் காண்பித்தார்கள்.  அப்போது திருச்செல்வியின் தாய்க்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டதோடு மட்டுமல்லாமல் மூச்சுத் திணரலும் அதிகமாக இருப்பதாக தெரிய வந்தது. இந்த இரண்டு நோய்களைத் தவிர சர்க்கரை நோய் கூட இருந்து வந்துள்ளது. 

தொடர்ந்து பதினைந்து நாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் நடைப்பிணம் போல இல்லம் திரும்பிய சமயம் குழந்தையை பார்த்த தாயின் முகம் மிகவும் வாடி விட்டது. மருத்துவ மனையில் இருந்த சமயம்  உடல் மிகவும் மெலிந்து விட்டது. தலை முடிகள் அனைத்தும் கொட்டி விட்டன. உடலின் நிறம் ஒரு மாதிரியாக மாறி விட்டது.  பெற்ற தாயினால் தமது மழலைக் குழந்தையுடன் கொஞ்சி விளையாடக் கூட முடியாத அளவிற்கு உடலில் பலம் குறைந்து விட்டது.

இந்த நிலையில் ஒரு விடுமுறை நாளன்று நட்சத்திர தம்பதியர் இருவரும் குழந்தை திருச்செல்வியுடன் குழந்தையின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குழந்தையின் தாய் இருவரையும் பார்த்து எனக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் இரண்டும் தவிர மூச்சுத் திணரலும் இருந்து கொண்டே இருக்கின்றது. இது போதாது என்று இரண்டு மூன்று நாட்களாக எனது இதயத்தில் லேசாக வலி தென் படுகின்றது. 



https://superstarheroine.blogspot.com/2019/12/adoptation-of-child.html


நான் நித்திய கண்டம் பூர்ண ஆயிசு என்று இன்றைக்கோ நாளைக்கோ என்று காலம் கடத்திக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலையில் என் உயிருக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் என் செல்லக் குழந்தையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இந்த குழந்தைக்கு என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே என்னுடைய இறுதி மூச்சு என் உடலை விட்டு பிரியுமுன்னர் இந்தக் குழந்தையை உங்களுக்கு சட்ட பூர்வமாக தத்துக் கொடுத்து விடுகின்றேன். நீங்களே என் குழந்தைக்கு பெற்றோராக இருந்து வளர்த்துப் பெரியவளாக்கி அவளது எதிர் கால ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அழுதவண்ணம் சொன்னது கேட்டு இருவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தொடர்ந்து அவர்களிடத்தில் இதற்கு உடன்பாடு இல்லையெனில் என்னுடைய குழந்தையை நான் உயிருடன் இருக்கும் போதே ஏதாவது ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுங்கள்.  என் குழந்தை அனாதையாக ஆஸ்ரமத்தில் வாழ்கின்றது என்னும் ஆத்ம திருப்தியுடன் நான் இறைவனடி சேர்கின்றேன் என்று  அழுதவண்ணம் கேட்டுக் கொண்டாள். அச்சமயம் பிஞ்சுக் குழந்தை திருச்செல்வி கதாநாயகி நடிகையின் விரல்களைப் பிடித்தவண்ணம் மடியில் உறங்கி விட்டது.  அதற்குப் பின்னர் நட்சத்திரத் தம்பதியர் இருவரும் தமது அறைக்கு குழந்தை திருச்செல்வியுடன் திரும்பினர்.

நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் இரவு முழுக்க தூங்காமல் குழந்தையைப் பற்றியே சிந்தித்த வண்ணம் பேசிக் கொண்டே இருந்தனர்.  அப்போது கதாநாயக கணவன் தம் மனைவியிடத்தில் உனக்கு PCOD என்னும் கோளாறு இருப்பதால் மறுபடியும் கர்ப்பம் தரிக்கும் சமயம் வழக்கம் போல் மாதவிலக்கு தாமதம் என்று அலட்சியமாக இருந்து விட்டால் பிறக்கப் போகும் குழந்தை எப்போது பிறக்கும் என்பதனை அறிவது மிகவும் கடினம்.  அதுவும் தவிர நான் பிறந்தவுடன் என்னுடைய தாயை இழந்த சோகம் எனக்கு இன்று வரையில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

இந்த நிலையில் குழந்தைப் பேறு என்னும் பாக்கியத்தில் உன்னை நான் இழக்க விரும்பவில்லை. எனவே எங்களை நம்பி இருக்கும் இந்த குழந்தையை அவளது தாயாரின் விருப்பப்படி தத்து எடுத்துக் கொள்வோம் என்று சொன்னது கேட்ட கதாநாயகியால் மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியவில்லை.

பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடிப்பவர்கள் தமக்குத் திருமணம் ஆகி விட்டால் ரசிகர்கள் தம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மார்கெட் சரிந்து விடும் என்று நினைத்து ரகசிய திருமணம் செய்து கொள்வார்கள். திருமணம் செய்து கொண்டாலும் அதனை மறைத்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த நட்சத்திர தம்பதியர் ஊரறிய உலகறிய லட்சக் கணக்கானோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அதே போல கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் தமக்குக் குழந்தை பிறந்தால் உடல் அழகு போய் விடும். கவர்ச்சி போய் விடும். கவர்ச்சி போய் விட்டால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்து விடும் என அஞ்சி குழந்தைகள் பெறுவதை தள்ளிப் போடுவார்கள் அல்லது அவர்களது திரைப்பட நடிப்புத் தொழிலில் சரிவு ஏற்பட்ட பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறான நடிகைகளுக்கு கால தாமதமாக குழந்தைகள் பிறப்பதால் குழந்தைகள் வளருமுன்பே நடிகைகளுக்கு முதுமை வந்து முதுமைக்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.  

ஆனால் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் நடிப்புத் தொழிலில் முன்னேற்றம் தான் இருந்துள்ளது தவிர சரிவு என்பதே இல்லை. ஆனால் குழந்தை பிறக்கும் சமயம் நடிகை தம்மை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்னும் ஒரே பயம் தான் நடிகருக்கு இருந்தது.  ஏனெனில் கணவன் மனைவிக்கிடையே அவ்வளவு ஒற்றுமை மற்றும் நெருக்கம் மற்றும் புரிந்துணர்வு.

எனவே குழந்தை திருச்செல்வியை அவளது தாயாரின் விருப்பப்படி தத்தெடுத்துக் கொள்வது என தீர்மானித்து அதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை வழக்கறிஞர் மூலமாக ஏற்பாடு செய்து ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரித்தல் சட்டம் 1956-ன் கீழ் குழந்தை திருச்செல்வியினை அவளது பெற்ற தாயாரின் ஒப்புதலுடன் நட்சத்திரத் தம்பதியினர் சட்டத்திற்கு உட்பட்டு சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர்

தத்து எடுத்துக் கொண்டவுடன் முதல் வேலையாக குழந்தை திருச்செல்வியை ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியில் மழலை வகுப்பில் சேர்த்தனர்.  இதனைக் கண்ணுற்ற குழந்தையின் பெற்ற தாய் மிகவும் சந்தோஷப் பட்டாள். 




Friday, 6 December 2019

First Night in Father's House : தந்தையின் வீட்டில் முதலிரவு

தந்தையின் வீட்டில் முதலிரவு


தேனிலவு மற்றும் படப்பிடிப்பு என இரட்டை பணிகளுடன் வெளி நாடுகளுக்குச் சென்ற நட்சத்திரத் தம்பதியர் இருவரும் மீண்டும் இந்தியா திரும்பி வெளி நாடுகளில் படமாக்கப் பட்ட திரைப்படங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சகஜ நிலைக்குத் திரும்பினர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர் நடைபெற வேண்டிய முதலிரவு மட்டும் இன்னும் நடைபெறாமல் உள்ளது.

எனவே மீண்டும் ஒரு முறை புரோகிதரை வரவழைத்து சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ள ஏற்கனவே குறித்துக் கொடுத்த நாட்களில் நடைபெறவில்லையா என புரோகிதர் கேட்க இடைப்பட்ட காலத்தில் நடை பெற்ற சம்பவங்கள் அனைத்தும் அவரிடத்தில் தெரிவிக்கப் பட்டது.



https://superstarheroine.blogspot.com/2019/12/first-night-in-fathers-house.html


அதனை அறிந்த புரோகிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து மீண்டும் சில குறிப்பிட்ட நாட்களை கணித்துக் கொடுத்தார். அப்போது புரோகிதரிடத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கின்ற தன்னுடைய தந்தை வாழ்ந்த வீட்டில் தான் சாந்தி முகூர்த்தம் நடைபெற இருப்பதாகவும் அதற்காக ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா எனக் கேட்க அந்த வீட்டில் ஏதேனும் கட்டுமான மாறுதல்கள் செய்யப் போகின்றீர்களா என புரோகிதர் கேட்டார்.

அப்போது கணவன் மனைவியைப் பார்த்த சமயம் சாந்தி முகூர்த்தம் நடைபெறவிருக்கும் இடம் தமது மாமனார் மற்றும் மாமியார் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த புனிதமான இடம்.  

தமது கணவரை அவரது தந்தை சுயமாக உழைத்து சம்பாதித்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருப்பதால் குடிசை வீடாக இருந்தாலும் சரி அல்லது பங்களாவாக இருந்தாலும் சரி வீட்டினில் எந்த வித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே ஒட்டடைகளை மாத்திரம் நீக்கி விட்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் அல்லது பெயிண்ட் பூசுதல் மற்றும் சிறிய சிறிய மராமத்துக்கள் ஆகியன மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 



https://superstarheroine.blogspot.com/2019/12/first-night-in-fathers-house.html


தமது கணவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது அவரது தந்தை மற்றும் அவரது வணிகம். எனவே தன்னுடைய மாமனார் வணிகம் செய்யும் சமயம் அவரது கரங்களில் நிழல் போலவே கூட இருந்து வந்த அந்த கை தட்டும் பொம்மையுடன் கூடிய மூங்கில் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதே போல தம்முடைய சொகுசான தற்காலிக தங்கலுக்காக எந்த விதமான புதிய பொருட்கள் அதாவது கட்டில் மேஜை சோபா போன்றவை எதுவும்  வாங்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட புரோகிதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் சாந்தி முகூர்த்தத்துக்கு உண்டான நல்ல நாட்கள் சிலவற்றினை குறித்துக் கொடுத்து சாந்தி முகூர்த்தம் நடைபெற இருக்கும் வீடு பல நாட்களாக பூட்டிக் கிடப்பதால் அந்த வீட்டில் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்னர் ஒரு முறை கணபதி ஹோமம் மட்டும் செய்தால் போதும் எனக் கூறி அந்த பொறுப்பினை அவரே ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அந்த வீட்டினை சுத்தம் செய்யவும் சிறிய அளவிலான மராமத்து பணிகள் ஏதேனும் இருந்தால் மேற்கொள்ளவும் பெயிண்ட் பூசுவதற்கும் பணியாட்களை அனுப்புவதென்றும் அந்த பணியினை தமது மேலாளர் பார்த்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப் பட்டன. அதன்படி தம்பதியர்களின் மேலாளர் மற்றும் இதர பணியாளர்கள் அந்த இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மேலாளர் மற்றும் கட்டுமானப் பணியாளர்கள் நட்சத்திர நடிகரின் வீட்டிற்குச் சென்று செப்பனிடும் பணிகளைத் துவக்கிய சமயம் மிட்டாய் தாத்தாவின் வீடு நீண்ட நாட்களுக்குப் பின்னர் புனரமைக்கப் படுகின்றது. எனவே ஏதேனும் விசேஷம் கட்டாயம் இருக்கும் என்னும் அனுமானத்தில் அக்கம் பக்கத்தினர் கேட்க ஆரம்பித்தனர். 

அப்போது அந்த மேலாளர் தாங்கள் அனைவரும் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்த மிட்டாய் தாத்தாவின் மகன் மற்றும் மருமகளுக்கு அதாவது நட்சத்திரத் தம்பதியினருக்கு இந்த வீட்டில் தான் முதலிரவு நடைபெற இருப்பதாகவும் அதற்காக வீட்டினை சுத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

இந்த விவரம் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் இருக்கும் நட்சத்திர நடிகரின் ரசிகர்கள் நடிகர் எப்போது வருகின்றார் எத்தனை நாட்கள் தங்கப் போகின்றார் என்ற கேள்விகள் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அந்த மேலாளர் இன்னும் தேதி முடிவாகவில்லை. ஆனால் மிக விரைவில் என்று மாத்திரம் சொல்லி முடித்தார்.

அதன் பின்னர் அனைத்து மராமத்துப் பணிகளும் முடிவடைந்தது என்னும் விவரம் நட்சத்திரத் தம்பதியினரிடம் தெரிவிக்கப் பட்டது.  

நட்சத்திரத் தம்பதியினர் மீண்டும் ஒரு முறை புரோகிதரை வரவழைத்து கணபதி ஹோமத்திற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசனை மற்றும் எந்த நாளில் சென்னையிலிருந்து புறப்படுவது எப்போது கணபதி ஹோமம் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டது.

அதற்குப் பின்னர் கதாநாயகியின் வேண்டுகோளின் படி திரைப்படத் துறையினருக்கு உணவு சமைத்துப் பரிமாறும் தம்பதியர் மணமகள் வீட்டின் சார்பாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற சமயம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து முடித்த அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் இதர துணை நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மணமகன் வீட்டின் சார்பாகவும்  அந்த இடத்திற்குச் செல்வது என்றும் முடிவெடுக்கப் பட்டது.

நிறைய பேர் அங்கு வந்து தஙகுவதற்கு வசதியாக இரண்டு திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப் பட்டு வருகை தருகின்ற அனைவருக்கும் விருந்து படைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நட்சத்திர தம்பதியினர் நமது சொந்த இல்லத்திற்கு வருகை தருவதை கொண்டாடும் வகையில் அவர்களின் ரசிகர்கள் ஊர் முழுக்க அவர்கள் நடித்து வெளி வந்த திரைப் படங்களின் போஸ்டர்களையும் வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும் அவர்கள் வருகின்ற வழியெங்கும் கட்டி மிகுந்த ஆரவாரங்களுடன் வரவேற்க ஆயத்தமாயினர்.

நட்சத்திரத் தம்பதியினர் சாந்தி முகூர்த்தம் குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகரின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். வருகின்ற வழியெங்கும் அவர்களை வரவேற்க கட்டப் பட்டிருக்கும் தோரணங்கள் மற்றும் வரவேற்பு வாசகங்களை கண்டு மகிழ்ந்தனர். அதே போல ரசிகர்கள் பலரும் சாலையின் இருபக்கமும் நின்று வரவேற்பு கொடுத்தனர்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் நடிகரின் வீட்டில் குறிப்பிட்ட நபர்களுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. கணபதி ஹோமத்திற்குப் பின்னர் தம்பதியினர் இருவரும் விருந்தினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

உள்ளுர் மக்கள் உள்ளுர் நண்பர்கள் உள்ளுர் ரசிகர்கள் மற்றும் சுற்றுப்புர வட்டாரங்களிலிருந்து ரசிகர்கள் எனஅனைவரும் வந்திருந்து நட்சத்திரத் தம்பதியினரிடம் நேரில் பேசி மகிழ்ந்தனர்.

திரைப் பட நடிகையின் உறவினர்களான அத்தை மற்றும் மாமன் வீட்டாரும் முறை மாப்பிள்ளைகளும் கூட வந்திருந்தனர். திரைப்பட நடிகை பல படங்களில் நடித்து முடித்த காரணத்தால் மிகுந்த மனப் பக்குவம் பெற்றிருந்தாள். 

நெல் பயிர் நாற்று நடும் போது நேராக நிமிர்ந்தும் நன்றாக வளர்ந்து அறுவடை செய்யும் சமயம் தலை குனிந்தும் காணப்படுவது போல பெற்றோர் உயிருடன் இருந்த சமயம் நாடோடிகள் என்று உதாசீனப் படுத்தியவர்களைக் கூட மிக்க பணிவுடன் வரவேற்று உபசரித்தாள்.  இது அவளிடத்தில் ஏற்பட்டிருந்த தன்னடக்கத்தை பிரதிபலித்தது.

அவ்வாறான உறவினர்களின் உள்மனதில் தமக்கு மருமகளாக வரவேண்டிய பெண் என்று பெரியவர்களும் தமக்கு மனைவியாக வரவேண்டிய பெண் என்று முறைப் பையன்களும் எண்ணினார்கள். ஆனால் காலம் அதனை மாற்றி அவளை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது.  

அவ்வாறான உறவினர்களிடத்தில் மாத்திரம் தனியாக அக்கரை எதுவும் காட்டாமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பாவித்து அனைவருடனும் அன்புடன் நடந்து கொண்டாள் நட்சத்திர நடிகை.

நட்சத்திர தம்பதியினரைக் காண வந்த ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கும் உறவினர்களுக்கும் கூடவே வந்திருந்த திரைப்படக் குழுவினருக்கும் என அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு மற்றும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. தம்பதியர்களைக் காண வந்து திரும்யிய அனைவருக்கும் திருமணத்தின் போது வழங்கப் படுவது போன்ற தாம்பூலப் பை  வழங்கப்பட்டது.

அனைத்தும் முடிந்த பின்னர் நட்சத்திர நடிகர் தமது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.  அதனைத் தொடர்ந்து நடசத்திர நடிகை திரைப்படக் கலைஞர்களுக்கு உணவு பரிமாறும் தம்பதியர்களிடம் ஆசி பெற்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் அலங்காரம் செய்து கொண்டு கையில் பால் செம்புடன் மல்லிகை மலர்களை தலையில் சூட்டிக் கொண்டு கணவர் இல்லத்திற்குப் புறப்பட்டாள். 

அவ்வாறு சென்ற சமயம் வழக்கம் போல் கணவன் காலில் மனைவி முதலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வேண்டும். 

ஆனால் மனைவியின் வேண்டுகோளின் படி கணவனும் மனைவியும் சேர்ந்து சவ்வு மிட்டாய் விற்பதற்கு தந்தையுடனேயே இருந்து வந்த கைதட்டும் பொம்மை உள்ள அந்த மூங்கில் (தற்போது Capital Asset எனச் சொல்லப்படும்) முன்னர் இருவரும் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர். 

காரணம் அவரது தந்தை பாடிய பாட்டினை அவரது குரலில் திரைப்படத்தில் பாடிய காரணத்தாலும் அந்தப் பாட்டு அவரது முதல் படத்தில் டைட்டில் பாடலாக வந்தமையாலும் அந்தப் பாட்டு அவருக்கு திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பாடகர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்ததோடு முன்னணி திரைப்பட நட்சத்திரமாகவும் மாற்றியது தான்.  தமது வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறி நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைவான புகழுடனும் வாழ ஆசீர்வதிக்க வேண்டும் என இருவரும் வேண்டிக் கொண்டனர்.

பின்னர் பல திரைப்படங்களில் நடித்த காட்சிகளை மனதில் முன் கொண்டு வந்து அதே போல கணவன் கால்களில் மனைவி விழுந்து வணங்கி அதன் பின்னர் மிகச் சந்தோஷமாக மிக மிகச் சந்தோஷமாக முதலிரவினை முடித்தனர்.

கட்டில் இல்லை மெத்தை இல்லை ஏசி இல்லை. மணமகள் சார்பாக புதிதாக ஜமுக்காளமும் தலையணையும் போர்வையும் இனிப்பு பதார்த்தங்களும் திரைப்படத்தில் உணவு பரிமாறும் தம்பதியர் குடும்பத்தார் நடிகையின் விருப்பப்படி பரிசாக அளித்து இருந்தனர்.  

படப்பிடிப்பிலே உள்ள சௌகர்யங்கள் மற்றும் தற்போது சென்னையில் வாழ்ந்து வரும் வீட்டில் உள்ள சௌகர்யங்கள் என எந்த விதமான சொகுசான வசதிகளும் இல்லாத போதும் கூட மாமனார் வீட்டில் மாமனார் ஆசீர்வாதத்துடன் ஊர் மக்களின் பேராதரவுடன் தமது ஆசை நிறைவேறியதை மனதில் எண்ணி நட்சத்திர நடிகை மிக்க சந்தோஷம் அடைந்தாள். அதை விட இரட்டிப்பு சந்தோஷம் நட்சத்திர நடிகருக்கு.  காரணம் எந்த நிலையிலும் பழையனவற்றை நினைவு கூர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் நல்ல குணம் கொண்ட பெண் தமக்கு வாழ்க்கைத் துணைவியாக கிடைத்தது.

அதன் பின்னர் நான்கைந்து நாட்கள் அந்த வீட்டிலேயே தங்கி அதிகாலையில் நடிகை எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு கைதட்டும் பொம்மை உள்ள மூங்கிலுக்கு முன்னர் விளக்கேற்றி வழிபாடு செய்து நட்சத்திர தம்பதியினர் இருவரும் உல்லாசமாக இருந்தனர்.

அச்சமயம் அவர்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசாரம் செய்து இருவரும் மிக மிகச் சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.

அவ்வாறு வந்து திரும்பிய அனைவரும் இருவரும் இவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தும் நிறைய புகழ் மிக்கவர்களாக இருந்தும் கூட யாரையும் ஏளனம் செய்யாமல் எல்லோரையும் ஒரே மாதிரி உபசரித்தது கண்டு பேரானந்தம் கொண்டு வாழ்த்தினர். 

நட்சத்திரத் தம்பதியினர் தமது முதலிரவினை சொந்தமாக உள்ள மூதாதையர் அதாவது நடிகரது தந்தை வீட்டில் முடித்த பின்னர் நலமுடன் சென்னை திரும்பினர். சொந்த ஊரில் நடந்த முதலிரவுக்குப் பின் மீண்டும் சென்னைக்குத் திரும்புமுன்னர் மாத்தில் ஒரு முறையாவது இந்த இடத்திற்கு வந்து இரண்டொரு நாட்கள் தங்கிச் செல்வது என முடிவு செய்தனர். 

அதற்குப் பின்னர் அவர்கள் சொந்தமாக வாங்கிப் போட்டுள்ள கொடைக்கானலிலுள்ள பங்களாவிலும் ஊட்டியிலுள்ள பங்களாவிலும் தங்கி உல்லாசமாக சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இயற்கை அழகினை ரசித்த பின்னர் மீண்டும் சென்னையிலுள்ள இல்லத்திற்கு திரும்பினா 

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல நட்சத்திரத் தம்பதியினர் சொந்த ஊருக்கு  திரும்பி வந்து விட்ட போதிலும் அவர்கள் தங்கியிருந்த நாட்களையும் அவர்கள் தங்கியிருந்த சமயம் நடைபெற்ற சம்பவங்களையும் தம்பதியர் இருவரும் அனைவரிடத்திலும் நடந்து கொண்ட பக்குவமான விதத்தினையும் ஊர் மக்கள் திரும்பத் திரும்ப ஒருவரிடம் மற்றொருவர் சொல்லி நினைவு படுத்திக் கொண்டு இருந்தனர். 

சென்னைக்குத் திரும்பிய தம்பதியர் சில வாரங்கள் குழந்தை திருச்செல்வியுடன் சந்தோஷமாக கழித்து விட்டு மீண்டும் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினர்.  மீண்டும் அதே ஜோடி தொடர்ந்து. பல படங்கள். 

.

Tuesday, 3 December 2019

Return to Home Land and Finishing Film : தாய் நாடு திரும்பி படப்பிடிப்பினை முடித்தல்

தாய் நாடு திரும்பி படப்பிடிப்பினை முடித்தல்


வெளி நாடுகளில் படப்பிடிப்பு மற்றும் தேனிலவு என்னும் எண்ணங்களுடன் அயல் நாடு சென்ற நட்சத்திரத் தம்பதியினர் இருவரும் திரும்ப இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர்.


வெளி நாடுகளில் நடந்த படப்பிடிப்பில் இரண்டு படங்கள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. ஒரே ஒரு படத்தில் மாத்திரம் ஒரு சில காட்சிகள் முழுமை பெறாமல் இருந்தன.


முழுவதும் நிறைவு பெற்ற படங்களில் எடிட்டிங் மற்றும் டப்பிங் ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு இரண்டு திரைப்படங்களும் வெளி வருவதற்கு திரைப்பட தணிக்கைச் சான்றிதழ் பெறுவதன் பொருட்டு தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப் பட்டு விட்டன. 


இன்னும் ஒரே ஒரு படம் மாத்திரம் நிலுவை. அந்தப் படத்தில் திரைப்படத்தில் கணவன் மற்றும் மனைவியாக நடிக்கும் நடசத்திரத் தம்பதியினருக்கு பிறந்த குழந்தை தேவை.


கதாநாயகி மருத்துவ மனையில் குழந்தை பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டு புதிதாகப் பிறந்துள்ள பச்சிளம் குழந்தையுடன் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். 


ஆனால் திரைப் படக் குழுவினர் திரைப்படத்தினை எடுத்த வெளி நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளில் உள்ள குழந்தைகள் வெளிர் சிகப்பு நிறத்தில் இருந்தமையால் இயக்குநர் ஒப்புக் கொள்ளவில்லை.



https://superstarheroine.blogspot.com/2019/12/return-to-home-land-and-finishing-film.html






இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் அழகாகவும் சிகப்பாகவும் அல்லது வெள்ளையாகவும் அல்லது மா நிறமாகவும் அல்லது கருப்பாகவும் தான் பொதுவாக இருக்கும். ஆனால் அங்குள்ள குழந்தைகள் மிகவும் வெள்ளையாக வெளிர் நிறத்தில் இருந்த காரணத்தால் அந்தக் காட்சியினை மட்டும் இந்தியாவில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அனைவரும்  இந்தியாவுக்கு திரும்பி விட்டனர்.


பச்சிளம் குழந்தையுடன் படப்பிடிப்பு நடத்தும் பொருட்டு  படப்பிடிப்புக் குழுவில் இருந்தவர்கள் அழகாக சிகப்பாக உள்ள புதிதாகப் பிறந்துள்ள குழந்தைகளைத் தேடி ஒவ்வொரு மருத்துவ மனையாக அலைந்த வண்ணம் இருந்தனர்.


குழந்தை படப்பிடிப்புக் குழுவினருக்கு பிடித்திருந்தால் குழந்தையை பெற்ற தாயின் உறவினர்கள் பிறந்த குழந்தையை படப்பிடிப்பில் பயன்படுத்தினால் பிறந்த குழந்தைக்கு படப்பிடிப்பு காட்சியின் போது காமிராவிலிருந்து வருகின்ற மிகவும் சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்கள் குழந்தையின் கண்களை குருடாக்கி விடும் என்று சொல்லி குழந்தைகளை கொடுக்க மறுத்தனர்.


அதே சமயம் படப்பிடிப்பின் போது குழந்தையினை பயன் படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் தாய்மார்கள் மற்றும் உறவினர்களின் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் நிறம் மற்றும் முகசாயல் நட்சத்திர தம்பதியினருடன் ஒத்துப் பார்க்கும் போது முற்றிலும் பொருந்தாமல் இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சம்மந்தமே இருக்காது. அவ்வாறான குழந்தைகளை படப்பிடிப்பில் பயன் படுத்த படப் பிடிப்புக் குழுவினர் தவிர்த்தனர்.


திரைப்படக் குழுவினர் தாய் நாடு திரும்பி இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் நடச்த்திரத் தம்பதியினருக்கு பொருத்தமான குழந்தை கிடைக்காமையால் படப் பிடிப்பு தாமதமானது. இந்த நிலையில் அனைத்து மருத்துவ மனைகளிலும் பணியாற்றும் டாக்டர்களிடத்திலும் செவிலியர்களிடத்திலும் இந்த விவரம் தெரியப் படுத்தி சிகப்பாக அழகாக குழந்தை பிறந்தால்  தம்மிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


ஒரு நாள் வெள்ளிக் கிழமை. திரைப்படக் குழுவினருக்கு அவர்கள் எதிர்பார்ப்பது போல ஒரு குழந்தை பிறந்து இருப்பதாகவும் குழந்தையின் தாயார் மயக்க நிலையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.


உடனே திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மருத்துவ மனையை அணுகி குழந்தையை பெற்ற தாயின் மயக்கம் தெளிவதற்குள் நட்சத்திர நடிகையை அருகில் உள்ள படுக்கையில் படுக்க வைத்து படப்பிடிப்பினை முடித்து விடலாம் என்று தம்பதிகள் இருவருக்கும் தெரிவித்தனர்.


நட்சத்திரத் தம்பதிகள் இருவரும் நேரில் வந்து குழந்தையை பார்த்தவுடன் அவர்களும் அந்த குழந்தை அழகாக உள்ளது எனவே படப்பிடிப்பின் போது இந்த குழந்தையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று மிக மிக சந்தோஷமாகத் தெரிவித்தனர். 


அதே சமயம் குழந்தையைப் பெற்ற தாயின் மயக்கம் தெளியாமல் அந்தக் குழந்தையை பெற்றது போல நடிப்பதற்கு நட்சத்திர நடிகை மறுத்து விட்டார். இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் உள்பட தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.


அச்சமயம் கதாநாயகி எனக்கு ஒரு நாள் மாத்திரம் அவகாசம் தாருங்கள் நானே குழந்தையை பெற்ற தாயிடம் நேரில் பேசி அதன் பின்னர் உங்களுக்கு சாதகமான முடிவினை தெரிவிக்கின்றேன் என்று சொன்னார்.  அதன் படி திரைப்படக் குழுவினர் காத்திருந்தனர்.  


திரைப்படக் குழுவினர் அந்த குழந்தையை பெற்ற தாய்க்கு ஸ்பெஷல் வார்டு அதாவது தனி அறை ஒதுக்கீடு செய்யக் கேட்டுக் கொண்டு அதற்கான கட்டணம் முழுவதையும் செலுத்துவது என்று தீர்மானித்த காரணத்தால் நட்சத்திர நடிகை குழந்தைக்கு அருகிலும் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு அருகிலும் காத்திருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்தார்.


குழந்தையை பெற்றெடுத்த தாயின் மயக்கம் தெளியும் சமயம் நட்சத்திர நடிகையின் கரங்களில் குழந்தை இருந்ததைக் கண்டு குழந்தையின் தாய் பேரானந்தம் அடைந்தார். அதன் பின்னர் நடசத்திர நடிகை குழந்தையை பெற்ற தாயிடம் பேசினார்.


அப்போது அந்த தாய் தனக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தன்னுடைய கணவர் நிறைமாத கர்ப்பிணியாக குழந்தை வயிற்றில் சுமக்கும் சமயம் திடீரென வாகன விபத்தில் காலமாகி விட்டார் எனவும் தமக்கு உறவினர்கனோ நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ யாரும் இல்லை என்றும் தெரிவித்தார். 


அச்சமயம் நட்சத்திர நடிகை தமது வருகை பற்றி அவரிடம் தெரிவித்த போது அவருக்கு மிக்க சந்தோஷம்.  எனக்கு எதிர்காலம் இருண்டது போல இருந்தது.  இந்தக் குழந்தை பிறந்த வேளை எனக்கு கடவுள் உங்கள் மூலமாக நல்வழி காட்ட ஆரம்பித்துள்ளார் என்று மிக்க சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார்.. 


நீங்கள் என் குழந்தையை படப்பிடிப்பின் போது தாராளமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். படப்பிடிப்பு தளத்திற்கு நானே வந்து என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து குளிப்பாட்டி பொட்டு வைத்து அழகாக உங்கள் கரங்களில் கொடுத்கின்றேன். 


படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயம் குழந்தை அழுதாலோ அல்லது பசியினால் துடித்தாலோ நான் அருகில் இருந்து தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் அழுகை நின்ற பின்னர் மீண்டும் உங்களிடம் கொடுக்கின்றேன். 


படப்பிடிப்பு நன்றாக அமையும் வரையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் உங்களுடன் நான் தங்கி இருக்கின்றேன் என்று மிக மிக சந்தோஷமாக தெரிவித்தார்.


அதன் பின்னர் குழந்தையையும் குழந்தையை பெற்றெடுத்த தாயாரையும் மருத்துவ மனையிலிருந்து அழைத்து வந்து நட்சத்திரத் தம்பதியினர் தமது வீட்டில் வைத்துக் கொண்டனர். 


படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்தது. செயற்கையாக ஒரு மருத்துவ மனை. கட்டில் மெத்தை தலையணை தொட்டில் மற்றும் டாக்டர்கள் செவிலியர்கள்.  


முதலிரவே நடக்காத நட்சத்திர நடிகைக்கு பிரசவம் ஆகி குழந்தை பிறந்தது போன்ற ஒரு காட்சி.  நடிப்பு என்று வந்து விட்டால் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் இயக்குநர் என்ன சொல்கின்றாரோ அதன்படி செய்தாக வேண்டும். இயக்குநர் என்ன சொன்னாரோ அதன்படி நட்சத்திர நடிகையின்  கரங்களில்  குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வருவது போல காட்சி படமாக்கப்பட்டது


அப்போது புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கும் நட்சத்திர நடிகைக்கும் ஆரத்தி காட்டி நட்சத்திர தம்பதியின் சொந்த இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் சமயம் நட்சத்திர நடிகை உண்மையில் தான் குழந்தை பெற்று இல்லம் திரும்புவது போல உணர்ந்தாள். இந்தக் காட்சி ஸ்டுடியோவில் நடைபெறாமல் நட்சத்திரத் தம்பதியர் இல்லத்திலேயே நடைபெற்றது.


புதிதாகப் பிறந்துள்ள குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து தாலாட்டுவது போலவும் குழந்தையை தம்மருகில் படுக்க வைத்துக் கொள்வது போலவும் படக் காட்சிகள் அமைந்தன.


புதிதாகப் பிறந்துள்ள குழந்தைக்கு திரைப்படத்தில் என்ன பெயர் வைப்பது என்று யோசித்தார்கள்.  குழந்தையை பெற்ற தாயிடம் கேட்டதற்கு குழந்தையின் தாய் நட்சத்திரத் தம்பதியினர் என்ன பெயர் வைத்தாலும் தமக்கு பரிபூரண சம்மதம் என்று தெரிவித்தார்.


அதன் படி இருவரும் பெயர் தேடலில் ஈடு பட்டனர். இதுவரையில் இல்லாத பெயராக இருக்க வேண்டும். ஆனால் பெயர் கேட்பதற்கு இனிமையாக தமிழ் பெபயராக இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு பலப்பல நபர்களிடம் ஆலோசனை கேட்டனர். ஆனால் அவர்கள் சொன்ன பெயர்கள் எதுவாக இருந்தாலும் அந்த பெயர் வேறு யாருக்கொ எப்போதோ அல்லது எந்த ஊரிலோ பயன் பாட்டில் இருந்து கொண்டு தான் இருந்தது.


இந்த நிலையில் கதாநாயகி ஒரு பெயரினை சொன்னாள்.  அது என்னவெனில் கதாநாயகன் பெயருக்கு எந்தக் கடிதம் வந்தாலும் அந்தப் பெயருக்கு முன்னால் திரு என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதே போல கதாநாயகிக்கு எந்தக் கடிதம் வந்தாலும் அந்தக் கடிதத்தில் திருமணத்திற்கு முன்னர் அவளது பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிடப் பட்டிருக்கும். 



எனவே நட்சத்திரத் தம்பதியினருக்கு திருமணத்திற்கு முன்னர் அவர்களுக்கு வந்த கடிதங்களில் பெயர்களுக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த திரு மற்றும் செல்வி ஆகியவற்றை இணைத்து புதிதாக

திருச்செல்வி 

என்று பெயர் வைப்பது என்று தீர்மானித்தனர். அதன் படி அந்தப் படத்தில் நடித்த அந்தக் குழந்தைக்கு திருச்செல்வி என்று பெயர் சூட்டப்பட்டது.


திரைப்படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் இருவரும் டப்பிங் சமயம் குரல் கொடுத்து திரைப்படத்தினை பூர்த்தி செய்தனர். அதே சமயம் குழந்தையின் அழுகையை அப்படியே ஒலிப்திவு செய்து திரைப்படத்தில் இணைத்து டப்பிங் முடித்தனர். திரைப்படம் விரைவில் வெளி வந்தது.  இருவருடைய குரல் வளமும் குழந்தையின் உண்மையான அழுகை ஓசையும் அந்தப் படத்திற்கு மேலும் மேலும் மெருகூட்டின.


மூன்று படங்களும் மீண்டும் நன்றாக ஓடி நல்ல வசூல் சாதனையக் கொடுத்தன. 


அந்த சமயத்தில் குழந்தை தம்முடனேயே இருக்க வேண்டும் என்னும் எண்ணம் வளர ஆரம்பித்தது.  அந்த விவரத்தை குழந்தையை பெற்றெடுத்த தாயிடம் தெரிவித்த சமயம் எனக்கு எந்த வித சொந்தமும் இருப்பிடமும் இல்லாத காரணத்தால் அங்கேயே சமையலறையிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறிய அறையிலோ வேறு பணியாளர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தால் போதும் என்று சொன்னது கேட்ட நட்சத்திர தம்மபதியினர் இருவரும் மிக்க சந்தோஷமடைந்தனர்.


முதலிரவு நடக்காமலே கைக் குழந்தையுடன் வருவது போன்ற காட்சியில் தத்ரூபமாக நடித்த காரணத்தால் நட்சத்திர நடிகைக்கு மிக்க ஆனந்தம் மற்றும் பூரிப்பு.  அந்தப் படத்திற்கு சிறந்த படம் சிறந்த நடிப்பு சிறந்த நடிகை போன்ற பலப்பல விருதுகள் குவிந்தன.





Monday, 2 December 2019

First Night not happened : முதலிரவு எதுவும் நடக்கவில்லை.

முதலிரவு எதுவும் நடக்கவில்லை.


நட்சத்திரத் தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் தம்முடைய வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் எப்படி எல்லாம் இருந்தார்கள். எப்படி எல்லாம் கஷ்டப் பட்டார்கள் என்பதனை ஒருவர் சொல்ல மற்றொருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர். 


முதல் நாளன்று கணவன் மனைவி இருவரும் தனி அறையில் தனிமையில் சந்தித்த போதும் இரண்டாவது நாளன்று அதே போன்று சந்தித்த போதும் நடந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த காரணத்தால் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டனர்.


வழக்கமாக சினிமாவில் நடிக்க வருகின்ற நடிகர்களையும் நடிகைகளையும் பார்க்கும் ரசிகர்கள் திரைப்படக் கலைஞர்கள் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் இருக்கலாம்  என்னும் எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கின்றார்கள் என்பதனை ஒருவருக்கொருவர் நன்றாக அறிமுகம் செய்து கொள்வதனால் தான் தெரிய வரும். 


அதே போல திருமணமானவர்கள் கன்னிப் பெண்களாகவும் திருமணமாகாதவர்கள் தாயாகவும் நடிப்பார்கள். அந்த விவரம் ரசிகர்களுக்குத் தெரியாது. 


இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொண்டார்கள்.  இருவரும் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள் என்பதனை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.


வெளி நாடுகளில் படப்பிடிப்பு மற்றும் தேனிலவு என்று சொல்லி மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நட்சத்திரத் தம்பதியினர் பல நாட்கள் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். 


இப்படியே சில மாதங்கள் கடந்து விட்டன. முதலிரவு நடக்கவில்லை.  வழக்கம் போல் இருவரும் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு மிகவும் சந்தோஷமாக புறப்பட்டுச் சென்று வந்தனர்.


அவ்வாறாக படப்பிடிப்பு நடந்து வரும் சமயம் ஒரு நாள்  கதாநாயகி குளத்தில் விழுவது போலவும் கதாநாயகன் குளத்தில் குதித்து கதாநாயகியை குளத்திலிருந்து தூக்கி வந்து மயங்கிக் கிடக்கும் கதாநாயகியை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதி ஆகியவற்றை அமுக்கி கதாநாயகி வயிற்றில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து கதாநாயகியை காப்பாற்றுவது போலவும் காட்சி. 


இருவரும் மிகக் குறுகிய நேரத்தில் அந்தக் காட்சியில் நடித்து முடித்தனர். மேற்கொண்டு இன்னும் குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது படப்பிடிப்பு நடைபெற வேண்டும்.  ஆனால் திரைப்பட இயக்குநர் தம் குழுவினரிடம் பேக் ஆஃப் என்று உரத்த குரலில் சொன்னார்.  


திரைப்படக் கதாநாயகிக்கு எதுவும் தெரியவில்லை. இன்னும் 4 மணி நேரம் படப்பிடிப்பினை நடித்தலாமே அதற்குள் ஏன் படப்பிடிப்பை முடிக்கின்றார்கள் என்று கேட்டார்.  அதற்கு கதாநாயகன் கதாநாயகியிடம் தண்ணீரில் விழுந்து காப்பாற்றிய காரணத்தால் உனக்கு ஓய்வு தேவைப்படலாம் என்று நினைத்து படப்பிடிப்பினை பாதியிலேயே முடித்திருப்பார்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.



https://superstarheroine.blogspot.com/2019/12/first-night-not-happened.html


அதன் பின்னர் இருவரும் சற்று நேரம் கடைதெருவிற்குச் சென்று விட்டு சொகுசு விடுதிக்குத் திரும்பினார்கள்.  சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியிருந்த அறையின் முகப்புக் கதவில் ஒரு வாசகம் ஒட்டப் பட்டிருந்தது.  திரைப்படக் கலைஞர்கள் அல்லவா?. அசத்தி விட்டார்கள்.


அதற்குப் பின்னர் புதுமணத் தம்பதியர் இருவரும் தமது அறைக்குள் நுழைந்தார்கள். அங்கு திரைப்பட படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் இருந்தார்கள்.  வித்தியாசமான வாசகங்களுடன ஒரு கேக்.  அந்த வாசகம் இருவரையும் மிகவும் கவர்ந்து விட்டது.




https://superstarheroine.blogspot.com/2019/12/first-night-not-happened.html


அப்போது திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் துணை நடிக நடிகையர் என அனைவரும் சேர்ந்து நட்சத்திரத் தம்பதியர் இருவரையும் ஆசீர்வதித்து வாழ்த்தி விட்டு கேக் கட் செய்து முடித்தவுடன் அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பினர்.


அதன் பின்னர் மனைவி கணவனைப் பார்த்து என்னங்க இதெல்லாம் என்று கேட்டார். அதற்கு கணவன் புரோகிதர் சாந்தி முகூர்த்தத்திற்கு குறித்துக் கொடுத்த நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது. அதனால் தான் இந்த ஏற்பாடெல்லாம் என்று சொன்னார். உடனே மனைவி கணவனைப் பார்த்து இந்த விவரம் ஏன் என்னிடத்தில் முன் கூட்டியே தெரிவிக்க வில்லை என்று கேட்டதற்கு ஆச்சர்யப் படுத்தத் தான் என்று கணவன் கூறினார். 


உடனே மனைவி கணவரிடத்தில் நான் சொல்வதை இன்று மட்டும் தயவு செய்து கேளுங்கள் இந்த நேரத்தில் முதலிரவு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 


அதற்கு கணவன் இயற்கை உபாதைகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்க அதெல்லாம் இல்லை நான் முதலிரவுக்கு தயாரான நிலையில் எந்தவித இடையூறும் இல்லாமல் நன்றாகத் தான் இருக்கின்றேன். உடல் நிலையிலோ அல்லது மன நிலையிலோ எந்த விதமான பாதிப்பும் இல்லை. இருந்தாலும் நான் சொல்வதை தயவு செய்து இன்று மாத்திரம் கேளுங்கள் என்று சொல்ல கணவன் மனைவியடம் சரியெனச் சொல்ல மனைவி ஆரம்பித்தாள்.


சூரியன் பூமிக்கு அப்பால் வெகு தூரத்தில் இருக்கின்றது. சூரியனது ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் ஒன்பது நிமிடங்கள் ஆகின்றது. நடுவில் உள்ள ஓசோன் படலம் சூரிய மண்டலதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களை கிரகித்துக் கொண்டு வெளிச்சத்தை மாத்திரம் நமக்குக் கொடுக்கின்றது. 


ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தை கணிக்கும் சமயம் யாருக்கு ஜாதகம் கணிக்கின்றார்களோ அவர் எந்த இடத்தில் பிறந்தாரோ அந்த இடத்தை வைத்துக் தான் ஜாதகம் கணிப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு இடத்திற்கும் சூரிய உதய நேரமும் சூரிய அஸ்தமன நேரமும் மாறுபடும். எனவே சூரிய உதய நேரத்தை மனதில் கொண்டு அந்த நேரத்தை வைத்துக் கொண்டு தான் ஜாதகத்தை கணிப்பார்கள். அவ்வாறு கணித்தால் தான் அது உண்மையான ஜாதகமாக இருக்கும். அவ்வாறான ஜாதகத்தினை ஆராய்ந்து சொல்லப்படுகின்ற ஜோதிடம் பிற்காலத்தில் உண்மையாக இருக்கும். ஜோதிடர் சொல்லும் ஜாதகப் பலன் பொருத்தமாக இருக்கும். 


அதே போல நல்ல நேரம் என்பது ஆங்கிலத்தில் Geographic Location அதாவது புமியில் அந்த இடம் அமைந்துள்ள பகுதி எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது என்பதனை வைத்தே நல்ல நேரம் குறிப்பார்கள். இந்தியாவில் சூரிய உதயம் ஆகுமுன்னரே ஜப்பானில் சூரிய உதயம் ஆகி விடும். அதே போல இந்தியாவில் 12 மணி நேரம் பகலும் 12 மணி நேரம் இரவும் மாறி மாறி இருக்கும். 


ஆனால் சில நாடுகளில் உதாரணமாக நார்வே, ஐஸ்லாந்து, கனடா, அலாஸ்கா. சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் பகல் பொழுது அதிகமாகவும் இரவுப் பொழுது மிக மிக குறைவாகவும் இருக்கும். ஒரு சில மாதங்களில் சூரிய அஸ்தமனமே இல்லாமல் எப்போதும் பகல் பொழுதாகவே இருக்கும் அவ்வாறான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு நமது இந்திய கலாச்சாரம் மற்றும் ஜாதகம் கணிக்கும் முறைகள் பொருந்தாது. 


இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் மட்டுமே பகல் பொழுது குறைவாகவும் இரவுப் பொழுது அதிகமாகவும் இருக்கும்.  நிறைய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு சில நிமிடங்கள் தான். 


இந்தியாவில் புதிதாக மணமுடித்துக் கொண்ட தம்பதியர் முதலிரவினை இரவில் கொண்டாடுவதற்கான காரணம் இரவில் வெயிலில் கொடுமை இருக்காது குளிர்ச்சியாக இருக்கும். அவ்வாறான குளிர்ச்சியான நேரத்தில் தான் முதலிரவு மிகவும் சந்தோஷமானதாக அமையும். 


அத்துடன் மணமகளுக்கு மல்லிகை மலர்கள் சூட்டி கையில் பால் கொடுத்து முதலிரவுக்கு தோழியர் அனுப்பி வைப்பார்கள். அதே நேரத்தில் முதலிரவு நடக்கும் அறைக்குள் இனிப்பு பண்டங்கள் நிறைய வைத்திருப்பார்கள். ஏனெனில் முதலாவது இல்லறத்தினை மல்லிகை மணத்துடன் வாயில் இனிப்புடன் ஆரம்பிக்க வேண்டும். நடுவில் தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்குப் பதிலாக சத்தான பசுவின் பால் அருந்த வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்வார்கள்.


இன்னும் சில வீடுகளில் பரம்பரைக் கட்டில் என்று ஒன்று இருக்கும் அந்த கட்டிலை புதிதாக மணமுடித்துக் கொண்டு வரும் அந்த வீட்டின் புது மணத் தம்பதியருக்கு முதலிரவுக்கு மட்டும் உபயோகப் படுத்தி விட்டு மீண்டும் பத்திரமாக எடுத்து வைத்து விடுவார்கள். காரணம் அடுத்த புது மணமகள் வரும் போதும் பரம்பரைக் கட்டிலைத் தான் முதலில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது.


நானும் சரி நீங்களும் சரி ஆம்பரத்துடன் கூடிய சொகுசான வாழ்க்கையில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. பணம் அந்தஸ்து இன்று வரும் நாளை போகும். இருந்தாலும் ஒரு தனி மனிதன் ஆரம்ப காலத்தில் எப்படி வாழ்ந்தானோ அதனை நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்த்தால் தான் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்னும் கருணை உள்ளம் வரும்.  


நேற்றுப் பெய்த மழையில் இன்று பூத்த காளானாக மாறி நாளை மறுபடியும் வெயில் வரும் சமயம் சுருண்டு போய் விடக் கூடாது என்பதில் நான் திடமாக இருக்கின்றேன். எனவே நான் சொல்வதை நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும்.


என்னுடைய மாமனார் அதாவது உங்களது தந்தை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து பெரிய ஆளாக்கினாரோ அந்த இல்லம் தான் என்னுடைய கோயில். அதே போல என்னுடைய மாமனார் சவ்வு மிட்டாய் விற்பதற்கு எந்த மூங்கிலையும் பொம்மையையும் பயன்படுத்தி பாட்டுப் பாடி விற்று உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினாரே அந்த கை தட்டும் பொம்மையும் மூங்கிலும் தான் என்னைப் பொருத்த வரையில் குல தெய்வம். இதனைத் தான் நம் முன்னோர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி வணங்கினார்கள்.


இன்னும் ஒருபடி மேலாக என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோர் திரைப்படக் கலைஞர்களுக்கு உணவு பரிமாறி என்னை வளர்த்த காரணத்தால் அது போன்ற தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் என் பெற்றோருக்கு ஈடானவர்கள். எனவே திரைப்படத்தில் நடிக்கும் சமயம் எனக்கு உணவு பரிமாறுகின்றவர்களை அம்மா என்றும் அப்பா என்றும் அழைக்கின்றேன். 


என் தந்தை இறக்கும் சமயம் நான் அருகில் இல்லை. என் தாய் என் அருகில் படுத்திருக்கும் சமயம் இறந்தது எனக்கு விடிந்த பின்னர் தான் தெரியும். அவர்களில் யாராவது நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தால் கூட அவர்களுக்கு பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கும் எனக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லை.


இந்த வெளி நாட்டில் பட்டப் பகலாக இருக்கும் இந்த நேரம் இந்தியாவில் இரவுப் பொழுது என்று புரோகிதர் சாந்தி முகூர்த்தத்துக்கான நல்ல நேரம் குறித்துக் கொடுத்துள்ளார். அதனைப் பின் பற்றலாம் என்பதனை ஒரு பக்கம் வைத்து விட்டு புரோகிதர் குறித்துக் கொடுத்துள்ள அடுத்த சாந்தி முகூர்த்த நாளைக்கு உங்களது பழைய வீட்டினை யாரேனும் ஒருவர் மூலம் சுத்தம் செய்யச் செய்து நாம் இருவரும் அங்கு சென்று முதலிரவை வைத்துக் கொள்ளலாம்.  


அந்த வீட்டில் தற்போது இருக்கும் வசதிகள் மட்டும் போதும் புதிதாக கட்டில் மெத்தை எதுவும் வாங்கக் கூடாது. கோரப் பாயும் தலையணையும் மாத்திரம் இருந்தால் போதும். 


உங்களுக்கு உங்கள் தந்தை வாழ்ந்த, உங்கள் தந்தை உங்களை வளர்த்து ஆளாக்கிய வீடு சொந்தமாக இருக்கின்றது. ஆனால் எனக்கு என்னுடைய உறவினர்கள் சொன்னது போல என் பெற்றோர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால் எனக்குத் தாய் வீடு என்று சொல்லிக் கொள்ள இந்தப் பூவுலகில் எந்த இடமும் இல்லாமல் போய் விட்டது. இன்றைய நாளில் நான் லட்சாதிபதியாக அல்லது கோடீஸ்வரியாக இருந்து என்ன பயன்? தாய் வீடு என்று சொல்லிக் கொள்ள எனக்கு இந்த பூமியில் எங்கும் இடமில்லை என்பது நிதர்சனமான உண்மை. 


உங்கள் தந்தை வாழ்ந்த வீட்டில் சாந்தி முகூர்த்தம் வைத்துக் கொண்டால் தான் தெருத் தெருவாக பாட்டுப் பாடி சவ்வு மிட்டாய் விற்று உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடையும். அதே போல சினிமா கலைஞர்களுக்கு உணவு பரிமாறும் தம்பதியர் அவர்கள் கரங்களால் என்னை அலங்கரித்து என்னிடம் பால் செம்பு கொடுத்து என்னை உங்களிடத்தில் முதலிரவுக்கு அனுப்பி வைத்தால் என் பெற்றோர்களின்; ஆன்மா சாந்தியடையும்.


எனவே வெளி நாடுகளில் பட்டப் பகலில் முதலிரவு கொண்டாடுவதற்குப் பதிலாக இந்தியாவில் அதுவும் நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டில் உங்கள் தந்தை உங்களை இந்த அளவிற்கு ஆளாக்க உதவியாக இருந்த அந்த பொம்மையினை வணங்கிய பின்னர் நாம் இருவரும் சந்தோஷமாக முதலிரவு கொண்டாடலாம் என்றும் அந்த வீட்டில் வசதிகள் எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்கள் தந்தையின் நல்லாசி வேண்டும் என்றும் சொல்லி முடித்தார்.


இதனைக் கேட்ட கதாநாயகனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிட தன் மனைவியை மீண்டும் ஒருமுறை கட்டியணைத்து நீ சொன்னவாறே முதலிரவினை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்புக் கொண்டார். 


புரோகிதர் குறித்துக் கொடுத்த நல்ல நாளிலும் நல்ல வேளையிலும் கூட முதலிரவு நடக்கவில்லை. ஆனால் இருவருக்கும் எந்த விதமான வருத்தமோ அல்லது ஏக்கமோ இல்லை. 





Sunday, 1 December 2019

Wife Introduction : மனைவி அறிமுகம்.

மனைவி அறிமுகம்.

கணவன் மனைவியிடம் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட பின்னர் இருவரும் உறங்கலாயினர்.



https://superstarheroine.blogspot.com/2019/12/wife-introduction.html


மறு நாள் அதிகாலையில் கணவன் எழுவதற்கு முன்பே மனைவி எழுந்து குளித்து விட்டு சொகுசு விடுதியின் சமையலறைக்கு போன் செய்து காபி வரவழைத்து அவளது கணவரை படுக்கையிலிருந்து துயிலெழுப்பி கொடுக்கும் சமயம் கணவன் மனைவியைப் பார்த்த பார்வை மிகவும் நெருடலாக இருந்தது.


அவர் தந்தைக்குப் பின்னர் அந்த இடத்திற்கு அவரது மனைவி வந்திருப்பதாக உணர்ந்தார். ஏனெனில் அவருக்கு தாயைப் பற்றியோ தாயன்பைப் பற்றியோ முற்றிலும் தெரியாது. அதன் பின்னர் தினசரி பத்திரிக்கைகளை படித்து முடித்த பின்னர் கணவன் குளித்து விட்டு வந்து அமர்ந்தார். அப்போது மனைவி அவருக்கு உண்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்டறிந்து சமையறைக்கு போன் செய்து வரவழைத்துப் பரிமாறினாள். 


விடுதி பணியாளர்கள் நட்சத்திரத் தம்பதியர் இருவருக்கும் பரிமாறுவதற்கு தயாராக இருந்த போதிலும் தம் கணவருக்கு தாமே பரிமாற வேண்டும் என்னும் கடமையிலிருந்து தவறவில்லை. இருவரும் காலை உணவு முடித்த பின்னர் படப்பிடிப்பிற்குச் செல்ல தயாராயினர்.


வழக்கம் போல் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கு எல்லோருடனும் கல கலப்பாக உறையாடி விட்டு படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள கடைத் தெருவிற்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு இருவருக்கும் பிடித்தமான அல்லது அழகாகத் தெரிந்த ஹோட்டலில் இரவு சாப்பாட்டினை முடித்து விட்டு விடுதிக்குத் திரும்பினர்.


கணவனும் மனைவியும் ஒரே கட்டிலில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள். முதல் நாள் இருந்த வெட்கம் மற்றும் விலகல் குறைந்து நெருக்கம் சற்று அதிகமாக இருந்தது.


கணவன் மனiவியிடம் நான் என்னைப் பற்றி நேற்று சொன்ன பின்னர் என்ன நினைக்கின்றாய் எனக் கேட்டார். அதற்கு மனைவி என்னைப் போல் நீங்களும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றீர்கள் என்பதனை நன்றாக அறிந்து கொண்டேன். இன்று என்னைப் பற்றி நான் சொல்லலாமா எனக் கேட்டவுடன் கணவர் சரியென்று சொல்ல மனைவி அவளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.


என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனது தந்தையும் தாயாரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் இரண்டு வீட்டாரும் என்னுடைய தாயாரையும் தந்தையையும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். உற்றார் உறவினர்களின் உறவுகள் இல்லாவிட்டாலும் இருவருடைய வாழ்க்கையும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியதின் காரணமாக நான் மிகவும் அழகாகப் பிறந்து விட்டேன்.


என் தந்தை மிகவும் சுறு சுறுப்பானவர். என் தாய் மிகவும் அழகானவள். அவர்களுக்கு மகளாகப் பிறந்ததால் என்னுடைய தாயின் அழகும் என்னுடைய தந்தையின் சுறு சுறுப்பும் என்னிடத்தில் ஒரு சேரக் குடிகொண்டு விட்டது. அதே நேரத்தில் என் பெற்றோரது உறவினர்கள் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்த போதிலும் யாரும் என் பெற்றோரை மதிப்பதில்லை. உறவு கொண்டாடுவதில்லை. 


எனவே நான் படித்து பட்டம் பெற்று நிறைய சம்பாதித்து என் பெற்றோரை அவரது உறவினர்களுக்கு இணையாக முன்னேற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்தால் நன்றாகப் படித்து பட்டப் படிப்பை முடித்தேன். ஆனால் அவர்கள் இருவரும் ஏழையாக இருந்த ஒரே காரணத்தால் நானும் ஏழையாக இருப்பது போல உணர்கின்றேன்.





https://superstarheroine.blogspot.com/2019/12/wife-introduction.html


எனக்கு திரைப்படத்தில் நடிக்கும் ஆசை எதுவும் கிடையாது. ஆனால் என்னுடைய பெற்றோர் சினிமாவினால் தான் வாழ்க்கை நடத்தினார்கள். எப்படியெனில் சினிமா ஸ்டுடியோவில் உள்ள சமையலறையில் சமையல் செய்து சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி அவர்களும் அதன் மூலம் தமது பசியினை தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தை என்னிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை சினிமா கலைஞர்களுக்கு நான் உணவு பரிமாறுகின்றேன். எனவே சினிமா எனக்கு சோறு போடுகின்றது என்பது தான். படப்பிடிப்பு பலப்பல ஊர்களில் பலப்பல நாட்கள் நடைபெறும் என்னும் காரணத்தால் என்னை விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்தார்கள்.


படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் போது நான் என்னுடைய பெற்றோருடன் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் இருப்பேன். என்னுடைய தாயார் என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அனுப்பவே மாட்டார்கள். சமையலில் மாத்திரம் நான் உதவியாக இருப்பேன். உணவு பரிமாறக்கூட என்னை அனுமதிக்க மாட்டார்கள். 


ஏனெனில் யாரும் எந்த கால கட்டத்திலும் என்னை வேலை வாங்குவதை அவர்கள் விரும்பவில்லை. நான் சென்னையிலேயே இளங்கலை பட்டப் படிப்பை முடித்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதே போலவே என்னுடைய தந்தையும் தாயும் ஆசைப்பட்டார்.


என்னுடைய தந்தையின் எந்த ஆசைகளும் நிறைவேறவில்லை. அவர் ஆசைப்பட்டது என்னை அவரது தங்கையின் மகனுக்கோ அதாவது அத்தை மகனுக்கோ அல்லது என் தாயாரின் அண்ணன் அல்லது தம்பி மகனுக்கோ அதாவது எனது மாமாவின் மகனுக்கோ திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது. 


ஆனால் ஒண்டுவதற்கு இடம் இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் சமையல் செய்து வாழ்க்கை நடத்தி வரும் என் பெற்றோரை நாடோடிகள் என்று ஏளனப் படுத்தினார்கள். யாரும் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. நான் அழகாக இருந்தும் நன்றாகப் படித்திருந்தும் நமது வருமை என் தந்தைக்கு கவலையைத் தந்தது.


வெளியூருக்கு என்னுடைய தந்தையும் தாயாரும் படப்பிடிப்பு குழுவினருக்கு சமையல் செய்து பரிமாறுவதற்கு சென்றிருந்த சமயம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு உணவு பரிமாறும் நேரத்தில் திடீரென மாரடைப்பு வந்து அந்த இடத்திலேயே அகால மரணமடைந்தார். படப்பிடிப்பு குழுவில் இருக்கும் அவசர உதவி டாக்டர் ஒருவர் என் தந்தையை பரிசோதித்து திடீரென மாரடைப்பு வந்து இறந்து விட்ட காரணத்தால் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றாலும் உயிர் பிழைக்க வைக்க முடியாது என்று தெரிவித்தார். 


எனவே இயக்குநரும் தயாரிப்பாளரும் சாப்பிடுவதை பாதியிலேயே நிறுத்தி விட்டு என் தந்தையின் இறுதி சடங்கினை நிறைவேற்ற ஏற்பாடு செய்தனர். வேறு யாராவது இறந்து இருந்தால் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் சமையல்காரர் தானே என்பதால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. படப்பிடிப்பு பாதிக்கப்படவில்லை என்னும் காரணத்தால் தெரிவில்லை. தெரியப் படுத்தவும் இல்லை.. 


என் பெற்றோருக்கு என்னைத் தவிர வேறு உறவினர்கள் யாரும் இல்லாத ஒரே காரணத்தால் அந்த ஊரிலிருந்து என் தந்தையின் உடலை இங்கு கொண்டு வருவதற்கு பதிலாக என்னை அந்த ஊருக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் நானும் என் தாயாரும் திரும்ப வந்து சேர்ந்தோம்.  


என்னுடைய தந்தையும் தாயாரும் மிகவும் நெருக்கமாக அன்புடன் இருப்பார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். அவரது மறைவு என்னுடைய தாயாருக்கு தொழிலில் பாதிப்பை கொடுத்தது. தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினருக்கு சமையல் செய்யும் பொறுப்பு என் தாயாரால் தனிமையில் செய்ய முடியாது  என்பதன் காரணமாக என் தாயாரிடமிருந்து பிறருக்கு சமையல் பொறுப்பு கை மாறியது. எனது தாயாரின் வருமானம் குறைந்து விட்டது. 


அந்த நேரத்தில் என்னுடைய தாயார் அழகாக இருந்த காரணத்தால் ஏதேனும் துணை வேடங்களில் தாயாராவோ அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரங்களிலோ நடிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் கேட்டுக் கொண்டார்கள். 


என்னுடைய தந்தை உயிருடன் இருந்த சமயத்திலேயே என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்த என் உறவினர்கள் என் தாயார் சினிமாவில் நடித்தால் என்னை மணமுடித்து வைப்பது கஷ்டமாகி விடும் என்று பயந்து என் தாயார் சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார்கள்.


ஆனால் ஒரு துரதிருஷ்டம் என்னுடைய தந்தை தனிஷ்டா பஞ்சமி என்னும் நட்சத்திரத்தில் அதாவது அடைப்பு என்று சொல்லப் படுகின்ற வேளையில் இறந்ததாலும் என்னுடைய தாயார் அவர் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்து இருந்த காரணத்தாலும் என் தந்தை இறந்த 30-வது நாளில் என் ;தாயார் திடீரென இரவுத் தூக்கத்தில் அகால மரணமடைந்தார். நான் அருகில் படுத்திருந்தும் எனக்கு எதுவும் தெரியவில்லை.  நான் தனி மரமானேன். எனக்கென்று உறவினர்கள் யாரும் இல்லை. 


ஒருவர் தனிஷ்டா பஞ்சிமியில் இறந்தால் எந்த இடத்தில் வாழ்ந்தாரோ அந்த இடத்தில் அடைப்பு காலம் முடியும் வரை சில சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பது எனக்கோ என் தாய்க்கோ அப்போது தெரியாது. 


அதே சமயம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த சமயம் என் தந்தை இறந்த காரணத்தால் அந்த இடம் என் பெற்றோர் வாழ்ந்த இடம் அல்ல என்பதனால் ஊருக்கு திரும்பி விட்டோம் என்பது தான் உண்மை.  ஒரு வேளை ஒரு வீட்டில் என் குடும்பத்தார் தங்கியிருந்து என் தந்தை இறந்திருந்தால் அவ்வாறான சம்பிரதாயங்களைச் செய்து என் தாயை நான் காப்பாற்றியிருக்க முடியும் என்பதனை நான் தற்போது உணர்கின்றேன். என்னுடைய தந்தை இறந்த பின்னர் என் தாயும் இறந்தது கண்டு நான் யாரும் இல்லாமல் அநாதையாக இருப்பதை உணர்ந்தவர்கள் பலர். 


என் தந்தை இறந்த சமயம் திரைப்படத்தினை இயக்கியவரும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் எனக்கு உதவி செய்ய முன் வந்தனர். உடனே நான் அவர்களிடத்தில் எனக்கு ஏதேனும் வேலை வாங்கித் தாருங்கள் அல்லது வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மன்றாடினேன்.  என்னுடைய வேதனையைக் கண்ட இயக்குநர் அவரது அடுத்த படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். நானும் என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக சரியென ஒப்புக் கொண்டேன். 


என்னுடைய தந்தையும் தாயாரும் என்னைத் திருமணம் செய்து வைக்க முறைப் பையன்களிடம் கெஞ்சி மன்றாடிய சமயம் வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் நான் சினிமாவில் நடிக்கின்றேன் என்று அறிந்ததும் எனக்கு கிடைக்க இருக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர்.  பெற்றோர் இருக்கும் போது என்னை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை பெற்றோர் இறந்த பின்னர் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 


அத்தை மகனை திருமணம் செய்து கொண்டால் மாமன் மகன் சண்டைக்கு வருவான். மாமன் மகனைத் திருமணம் செய்து கொண்டால் அத்தை மகன் சண்டைக்கு வருவான். என்னால் எதுவும் சமாளிக்க முடியாது என்ற காரணத்தால் நான் ஒரே முடிவாக என் பெற்றோர் உயிருடன் இருக்கும் சமயம் அவர்களின் பூரண சம்மதத்துடன் ஏற்படாத திருமண பந்தம் என்னும் உறவு இனிமேல் அவர்களுடன் வேண்டாம் என்று புறக்கணித்து விட்டேன்.


முதல் படத்தில் நடிக்கும் போது கதாநாயகி என்னும் காரணத்தால் எனக்குக் கிடைத்த மரியாதையும் கௌரவமும் அதனால் கிடைத்த பணமும் புகழும் என்னை திரைப்படத்திலேயே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்னும் உத்வேகத்தைக் கொடுத்தது. நான் செய்த அதிர்ஷ்டம் என்னுடைய முதலாவது படம் முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்கப் பட்டது. எனவே நான் மதிய உணவினை மட்டும் படப்பிடிப்பு தளத்தில் சாப்பிட்டு விட்டு  காலையிலும் மாலையிலும் ஹாஸ்டல் உணவினை எடுத்துக் கொண்டேன். 


காலையில் ஸ்டுடியோவிலிருந்து கார் வந்து என்னை படப்பிடிப்புக்காக அழைத்துச் செல்லும். மாலையில் என்னை மீண்டும் ஹாஸ்டலுக்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நான் நடித்த முதல் படம் வெளியானதும் என்னை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். 


நான் நன்றி மறக்காமல் முதல் படத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்த அந்த இயக்குநரையும் படத் தயாரிப்பாளரையும் கலந்தாலோசித்த சமயம் என்னுடைய கால்ஷீட் மற்றும் இதர பணிகளை எனக்கே தெரியாமல் உங்களது மேலாளர் கவனிக்கின்றார் என தெரிந்து கொண்டேன்.


அவரிடம் ஆலோசனை கேட்ட போது இனி வரும் அடுத்தடுத்த படங்களில் உங்களுடன் மட்டும் சேர்ந்து நடிக்க நிறைய படங்கள் இருக்கின்றன என்றும் அதற்கான ஒப்பந்தங்களில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். எனக்கே தெரியாமல் எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உங்கள் அறிவுறுத்தலின் படி முன் வந்த அந்த மேலாளர் சொன்னபடி அனைத்து ஒப்பந்தங்களிலும் நான் கையெழுத்து போட்டு உங்களுடன் மட்டுமே தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து முடித்தேன்.


இதனிடையில் நீங்கள் ஒரு நாள் என்னிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட சமயம் நான் ஒன்றும் சொல்லவில்லை. காரணம் எனக்கு என் தந்தை இறந்த அடைப்பு நேரமும் அதன் காரணமாக என் தாய் முப்பது நாட்களில் இறந்த காரணத்தாலும் அடைப்பு காலம் முடிவடையாத நிலையில் நானும் எப்போது வேண்டுமானாலும் அகால மரணமடைந்து விடலாம் என்றும் எண்ணினேன். அவ்வாறு நான் மரணம் அடைந்து விட்டால் நீங்கள் கஷ்டப்படக் கூடாது என்னும் எண்ணம் தான். 


ஆனால் நான் பதில் சொல்லாததை மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம் என்று என்னுடன் பணியாற்றியவர்கள் உங்களிடம் தெரிவித்ததாக நான் அறிந்து கொண்டேன். 


இதற்கிடையில் என்னிடம் பல படங்களில் நடித்த காரணத்தால் என் தாய் தந்தையின் உறவினர்களிடம் இருந்த பணத்தை விட அதிக அளவு பணம் சேர்ந்து விட்டது. நான் புகழின் உச்சிக்கே சென்று விட்டேன். எனவே என்னிடமிருந்த பணத்துக்காகவும் எனது புகழுக்காகவும் என்னை திருமணம் செய்து கொள்ள என்னுடை தாய் தந்தையின் உறவினர்கள் முயற்சி எடுத்தனர். உறவினர்களில் நான் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் என்னுடைய எதிர்காலம் எதிர் நீச்சல் போடக் கூடிய அளவில் சண்டைகளுடன் தான் இருக்கும் என்பது எனக்குத் தெரிய வந்தது. 


இந்த நிலையில் தான் நான் அடுத்த முறை நீங்கள் என்னிடம் திருமணம் பற்றி கேட்ட சமயம் உங்களிடம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்தேன்.  நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த பின்னர் ஒரு வார காலத்தில் நல்ல நாள் பார்த்து என்னை உங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்து சென்றீர்கள். 


அவ்வாறு நான் வந்திருந்த சமயம் இயக்குநரும் தயாரிப்பாளரும் அடுத்த படப்பிடிப்பு காட்சி பற்றி கேட்ட போது திரைப்படத்தில் வரும் திருமணக் காட்சியினை திருமண மண்டபத்தில் இல்லாமல் மிகப் பெரிய மைதானத்தில் நடத்த வேண்டும்.  அனைத்து ரசிகர்களும் பங்கு கொள்ள வேண்டும என்பதனைக் கேட்ட போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதனை விட மிகப் பெரிய சந்தோஷம் படப்பிடிப்பு திருமணத்தினை வளர்பிறையில் நல்ல முகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து கொடுக்க திரைப்படத்திற்கு பூஜை போடும் புரோகிதரை வரவழைத்தது தான். 


இதன் மூலம் ஜோதிடத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் நம்பிக்கை உள்ள உங்களுக்கு வாழ்க்கைப் பட்டால் எந்த நேரத்திலும் எந்த நிலைமையிலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதனை நான் அறிந்து கொண்டேன்.


திருமணம் நடப்பது போன்ற படப்பிடிப்பின் போது அங்கு குழுமியிருந்த உங்கள் ரசிகர்களையும் என்னுடைய ரசிகர்களையும் பார்க்கும் போது என்னுடைய பெற்றோர் இல்லையே என்னும் ஏக்கம் இருந்தது. ஆனால் என்னுடைய பெற்றோர் இருந்திருந்தால் நான் மேற்கொண்டு படித்து முதுநிலைப் பட்டம் தான் பெற்றிருப்பேன். இவ்வளவு ரசிகர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதனை உணர்ந்தேன்.  


திருமண நாளன்று நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து பலர் வந்து இருந்தார்கள் என்னுடன் படித்த என்னுடைய நண்பர்கள் பல பேர் வந்திருந்தார்கள். என்னுடைய முறைமாமன் மகனும் என்னுடைய அத்தை மகனும் கூட வந்து இருந்தார்கள். அவர்களுடன் நான் திருமணம் செய்திருந்தால் இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் மேள தாளங்களுடன் வாண வேடிக்கை பட்டாசு சத்தங்களுடன் ஒரு கல்யாண மண்டபம் மாத்திரம் நிறைந்திருக்கும்.  ஆனால் லட்சக் கணக்கானோர் கூடியிருக்கும் மைதானத்தில் நான் மணமகளாக  வந்து இறங்கும் சமயம் கிடைத்த லட்சக் கணக்கான ரசிகர்களின் ஆரவார வரவேற்பினை கண்டு களித்திருக்க முடியாது.


உங்களைத் திருமணம் செய்து கொண்ட சமயம் ஒரு மிகப் பெரிய மைதானமே திரண்டிருந்து ஊரே விழாக் கோலம் பூண்டு லட்சக் கணக்கானோர் முன்னிலையில் நான் உங்கள் கரங்களால் மோதிரம் மாற்றி கையெழுத்து போட்டு தாலி கட்டிக் கொண்டதை எண்ணும் போது புல்லரிக்கின்றது. 




https://superstarheroine.blogspot.com/2019/12/wife-introduction.html


எல்லோரும் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள் என்று மணமகள் வீட்டாரிடம் கேட்பார்கள். ஆனால் நம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பலர் எனக்கு தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு சீதனம் செய்வது போல எண்ணிக் கொண்டு தங்க நகைகளை பரிசுப் பொருட்களாக கொண்டு வந்து திருமண மேடையிலேயே அணிவித்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷமாக இருந்தது. அதனை மிகப் ;பெரிய பாக்கியமாக நான் கருதினேன்.


உங்களை நான் கணவனாக அடைவதற்கு இதற்கு முன்னர் ஏழு பிறவிகளில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பிறவியில் தவம் இருந்திருக்க வேண்டும். அந்த தவம் மற்றும் புண்ணியத்தின் பலனாகத் தான் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளேன் என்று காலடியில் விழுந்து வணங்கிய சமயம் கதாநாயகனான கணவன் இரண்டு தோள்களிலும் கைகளை வைத்து தூக்கி அரவணைத்துக் கொண்டார். 


வழக்கம் போல் மீண்டும் இருவரும் ஒரே படுக்கையில் அருகருகே உறங்கலாயினர். இரண்டாம் நாளன்றும் முதலிரவு நடக்கவில்லை.